India vs Pakistan Women’s Asia Cup 2026 Live score Updates: 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் 8 அணிகள் களமாடி இருக்கின்றன. இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அரை இறுதிக்கு முன்னேறிய இந்தியா
இந்நிலையில், ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2-வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. இதே பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் தாய்லந்தை வீழ்த்தி இருக்கிறது.
இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதல்
இந்த நிலையில், கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானதில் நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்ட இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த நினைக்கும்.
அதே போல் தனது கடைசி லீக் ஆட்டம் என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வரிந்து கட்டும். மறுபுறம், இந்தியாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போட்டு முன்னேறவே பாகிஸ்தான் நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும். 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
நேரலையில் பார்ப்பது எப்படி?
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. சோனி லிவ் தளத்தில் நேரலையில் பார்க்கலாம்.
இந்தியா பெண்கள் vs பாகிஸ்தான் பெண்கள் – உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்
இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பிரதிகா ராவல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), பார்தி ஃபுல்மாலி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பிரேமா ராவத், நந்தனி ஷர்மா, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட்
பாகிஸ்தானின்: முனீபா அலி (விக்கெட் கீப்பர்), ஷவால் சுல்பிகர், குல் பெரோசா, ஆயிஷா ஜாபர், சதாப் ஷமாஸ், பாத்திமா சனா (கேப்டன்), எய்மான் பாத்திமா, உம்-இ-ஹானி, துபா ஹசன், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.
இரு அணி வீராங்கனைகள் பட்டியல்:
இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பிரதிகா ராவல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), பார்தி ஃபுல்மாலி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பிரேமா ராவத், நந்தனி சர்மா, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட், குணாளன் கமலினி, ரேணுகா சிங் தாகூர், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ்.
பாகிஸ்தான் மகளிர் அணி: முனீபா அலி (விக்கெட் கீப்பர்), ஷவால் சுல்பிகர், குல் பெரோசா, ஆயிஷா ஜாபர், சதாப் ஷமாஸ், பாத்திமா சனா (கேப்டன்), உம்-இ-ஹானி, எய்மான் பாத்திமா, துபா ஹசன், நஷ்ரா சந்து, சாடியா இக்பால், சைரா ஜபீன், மொமினா ரியாசத்
நசீர், வஹீதா அக்தர்
