Mercury Transit September 2026,ஆட்சி பலம் பெறும் புதன் பகவான்: செப்டம்பர் 7 முதல் அடுத்த 20 நாட்களில் நல்ல மாற்றங்களை சந்திக்கக்கூடிய 5 ராசிகள் – mercury transit in virgo 2026: 5 zodiac signs that may experience positive changes over the next 20 days from september 7

புதன் பகவான் ஒருவருக்கு அறிவு, புத்திசாலித்தனம், திறமை, சாமர்த்தியம் உள்ளிட்ட அற்புத பலன்களை தரக்கூடியவர். இவர் செப்டம்பர் 7ஆம் தேதி தனது சொந்த ஸ்தானமான கன்னி ராசியில் நுழையுள்ளார். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை அங்கு சஞ்சரிக்கக்கூடிய புதன் பல்வேறு ராசிகளுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் பல்வேறு நல்ல வாய்ப்புகளை தரக்கூடியவராக இருப்பார்.

புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமைப்பு, அவர் ஆட்சி பெறுவதால் ஏற்படும் பத்ர யோகம், காரணமாக இந்த காலத்தில் பல ராசிகள் முன்னேற்றத்தையும், நல்ல வாய்ப்புகள், மகிழ்ச்சியை பெறக்கூடிய நபர்களாக இருப்பார்கள். எந்தெந்த நபர்களின் அதிக நன்மையை பெறுவார்கள் என இந்த பதிவை தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு புதன் பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டும் இல்லாமல், உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய காரணத்தால் உங்களுக்கு வேலை மற்றும் தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பணியிடத்தில் அனுபவசாலிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய சிறப்பான திட்டமிடல், ஆலோசனைகள் மூலம் வேலையை நகர்த்த முடியும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தின் வருடம் இனிய சுற்றுலா செவ்வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிகளுக்கு சரியான பாதை அமையும்.

மிதுன ராசி

மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், உங்களுடைய சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், பலவிதத்தை நன்மைகளை பெறுபவர்கள். குறிப்பாக உங்களுடைய எதிர்காலம் மனதில் வைத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் முதலீடு மூலம் நன்மைகள் தெரிவீர்கள். மேலும் கணிசமான லாபம் தரக்கூடிய திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வரக்கூடிய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பல புதிய வருமான வரிகள் உருவாகும். அதன் மூலம் உங்களுடைய நிதிநிலைமை மேம்படும்.

சிம்மம் ராசி

சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த புதனின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், நிதிநிலை தொடர்பான முன்னேற்றங்களை பெறுவீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். மேலும் திட்டமிட்டபடி எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும் என்பதால் உங்களுடைய முயற்சிகள் மற்றும் திட்டமிடலை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெறலாம். உங்களுடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி விவாகங்களில் வலுவாக இருப்பீர்கள். நீங்கள் எந்த வித சிக்கலில் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னி ராசி

கன்னி ராசிக்கு உங்கள் ராசி அதிபதி புதன் பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தாலும், தன ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றுச் சஞ்சரிப்பதாலும், உங்களுடைய முன்னேற்றத்திற்கான பல சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக நன்மைகள் பெறுவீர்கள். உங்களுடைய முக்கிய வேலைகளை முடிக்க நீங்கள் இருக்கும் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். நம்பிக்கை அதிகரிக்க கூடிய காலம். உங்கள் நல்ல செயல்பாடுகளால் குடும்பத்திலும், பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று, சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், உங்களுக்கு பணம் விதத்தில் நம்மை ஏற்படும். குறிப்பாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணங்கள் செல்லவும், நிதி திட்டமிடலில் ஈடுபடவும் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு, ஆலோசனை கிடைக்கும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய மனதிற்கு அமைதியை தரக்கூடிய செயல்களை செய்து மகிழ்வீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. மேலும் விரிவான தகவலுக்கு, தொடர்புடைய நிபுணரை அணுகவும்.

Source link