அரசின் மதிய உணவுத் திட்டம்; 2000 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி

இந்தோனேசியாவில் அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் நடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையம்  கோரிக்கை விடுத்துள்ளது.  

சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதன் காரணமாகவே நாடு முழுவதிலும் உள்ள சுமார் 2,000 மாணவர்களுக்குத் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கடந்த மூன்று நாட்களில் (01, 02, 03-09-26) மட்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவ்வாறான பாதிப்பிற்குள்ளாகி இருப்பது கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மதிய உணவுத் திட்டம் வருங்காலத்தில் இன்னும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

முன்னதாக, கடந்த 2025 ஜனவரியில் எம்ஜிபி எனும் இலவச உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், இதுவரை அந்நாட்டின் 36 மாகாணங்களிலுள்ள, 245 மாவட்டங்களில் 50,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.  

Source link