பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கடைசியாக த்ரிஷ்யம் படத்தின் 3ஆம் பாகத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவரது மகள் நடித்த ‘துடக்கம்’ மற்றும் பிரித்விராஜ் நடித்த ‘கலிஃபா’ ஆகிய படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படங்களை தொடர்ந்து தற்போது 7 படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் முதலாவதாக விஷ்ணு மோகன் படம் உருவாகி வருகிறது.
இப்படம் மோகன்லாலின் 367வது படமாகும். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாஸ்வத் சச்தேவ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படம் குறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “5 மொழியில் எடுக்குற பெருமைமிகு படத்தில 5 பேருல என் பேரும் இருந்தாலும், உண்மையான சந்தோஷம் என்னன்னா…. உண்மை சம்பவத்தை அடிப்படையா வைச்சு, 100 கணக்கான இந்திய மாணவர்களை ஒரு போர் ஆபத்தில் ஆக்சுவலா ஒரு பேராபத்திலிருந்து மீட்டதை மிகுந்த பொருட்செலவுல எடுக்குற படத்தில ஒரு பங்கா இருக்கிறது பக்கா மகிழ்ச்சியே” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படம், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யா-உக்ரைன் போரின்போது, ​​போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள் தாயகம் அழைத்து வரப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையை மையப்படுத்தி உருவாகுவதாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘Operation Ganga’
5 language-ல எடுக்குற பெருமைமிகு படத்தில 5 பேருல என் பேரும் இருந்தாலும், உண்மையான சந்தோஷம் என்னன்னா…. உண்மை சம்பவத்தை அடிப்படையா வைச்சு, 100 கணக்கான இந்திய மாணவர்களை ஒரு போர் ஆபத்தில் actual-ஆ ஒரு பேராபத்திலிருந்து மீட்டதை மிகுந்த பொருட்செலவுல எடுக்குற படத்தில… pic.twitter.com/uQ5KCliEct— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 5, 2026
