“எத்தனை தடவைதான் போய் சோதனை போடுறது?”

தமிழகத்தில் 10க்கும் அதிகமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (05.09.2026) சோதனை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. 

இந்நிலையில், இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அவர் (கே.என். நேரு)  வீட்டை இனிமேல் சுத்தம் பண்ண வேண்டிய அவசியமே கிடையாது. அடிக்கடி விஜிலன்ஸ் அண்ட் ஆன்டி கரப்ஷன் (டி.வி.ஏ.சி.) வந்து வீட்டை சுத்தம் பண்ணி வைத்துவிட்டுப் போயிடுவாங்க. அதனால், இனிமேல் அவர் ஆட்களைப் போட்டு சுத்தம் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது.

ஏன்னா, எத்தனை தடவைதான் ஒரு மனுஷன் வீட்டுக்குப் போய் சோதனை போடுறது? இப்போ சோதனை போட்டுக்கிட்டே இருக்காங்க. இன்னைக்கும் நல்லா சுத்தம் பண்ணி, கழுவிவிட்டுப் போயிடுவாங்கங்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏன்னா, சட்டமன்றத்தில் பேசுனா தப்புன்னா, அப்புறம் ஒண்ணுமே பண்ண முடியாது. எதிர்க்கட்சிகளுடைய குரலை ஒடுக்குகிற செயலை ஜனநாயகத்தினுடைய படுகொலை என்றுதான் சொல்லுவார்கள். அந்தச் செயலைத்தான் இன்றைய அரசு செய்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Source link