விஜய் குறித்து அவதூறு கருத்து: பிரவின் கணேசன் என்பவரை டெல்லி ஏர்போர்ட்டில் கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்

தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பிரவின் கணேசன் என்பவரை டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. கடந்த மே மாதம் விஜய் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அன்று முதல் அவர் குறித்து பாசிட்டீவான செய்திகள் இணையத்தில் வருவது போல், நெகடீவான கருத்துக்களும் பலரும் பதவிட்டு வருகின்றனர். 

மேலும் சமூகவலைதளங்களில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு கருக்களை பதிவிடுவோருக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் தனது சமூகவலைதளங்களில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட, பிரவீன் கணேசன் என்பவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் இவர் முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு பிறகு அதனை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அவருக்கு சைபர் கிரைம் காவல்துறை தரப்பில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இந்த நோட்டீஸின் அடிப்படையில் தற்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடம் இது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். 

இது குறித்து பிரவீன் கணேசன் தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், நான் தற்போது சி.எஸ்.ஐ.எப். (CISF) மற்றும் குடியேற்றத்துறை (Immigration) அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஐ.ஜி.ஐ (IGI) விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளேன். இந்த தடுப்புக் காவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தயவுசெய்து இந்த தகவலை அதிகமாகப் பகிர்ந்து உதவுங்கள். புதுடெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இங்கு இதுவரை எப்.ஐ.ஆரின் விவரங்கள் குறித்து யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. மேலும், இதுகுறித்து வேறு எந்தத் தகவலும் எனக்கு வழங்கப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Source link