காதலியை பார்க்க வீட்டுக்கு வந்த காதலன்..! கொதிக்க கொதிக்க எண்ணெய்..! நள்ளிரவில் தாய் செய்த கொடூரம்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (19). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த சசிகுமாரின் மகள் நட்சத்திரா (18) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோகுலகிருஷ்ணன் தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது நட்சத்திராவின் தாயார் முகமது தமீம், தனது மகளுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு கோகுலகிருஷ்ணனிடம் எச்சரித்துள்ளார். ஆனால் கோகுலகிருஷ்ணன் நட்சத்திராவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த தாய் முகமது தமீம், வீட்டிற்குள் சென்று அடுப்பில் நன்கு காயவைத்த சூடான சமையல் எண்ணெயை எடுத்து வந்து கோகுலகிருஷ்ணனின் முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதில் முகம் மற்றும் உடலின் பல இடங்களில் தீக்காயமடைந்து அலறித் துடித்த கோகுலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் நட்சத்திராவின் தாய் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கையில் பணம் இருந்தும்.. அருகில் உறவுகள் இல்லை! உருக்கமாக பேசிய சீரியல் நடிகை லதா ராவ்..

Next Post

Sat Sep 5 , 2026

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக தன் மீதும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேருவின் திருச்சி தில்லை நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 பேர் கொண்ட குழுவினர் வீடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாக அமைச்சராக நேரு இருந்தபோது, […]

19480961 knnehru

Source link