ஆசிரியர்கள் பெயருக்கு முன் 'டிஆர்.,' கர்நாடக முதல்வர் சிவகுமார் அறிவிப்பு

பெங்களூரு: ”ஆசிரியர்கள் இனி தங்கள் பெயருக்கு முன், ஆங்கிலத்தில் டீச்சர் என்பதை குறிக்கும், ‘டிஆர்.,’ என்ற குறியீட்டை சேர்த்து கொள்ளலாம்,” என, கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையிலா காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள விஜயநகரா மாவட்டத்தில் நேற்று ‘மக்கள் சேவை’ திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

ஒரு தேசத்தை உருவாக்கும் ஒவ்வொரு நபருக்கும் பின்னால், அவரை வடிவமைத்த ஒரு ஆசிரியர் இருக்கிறார். கர்நாடகாவில் உள்ள 4.5 லட்சம் ஆசிரியர்கள் உட்பட, நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள், ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மனங்களையும், ஆளுமைகளையும், எதிர்காலத்தையும் வடிவமைத்து வருகின்றனர்.

இந்த ஆசிரியர் தினத்தில், ஆசிரியர்கள் இந்த விலைமதிப்பற்ற பங்களிப்பை போற்றும் வகையில், கர்நாடக அரசு, ஒரு முக்கிய முடிவெடுத்து உள்ளது. இன்று முதல் கர்நாடகாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், தங்கள் பெயருக்கு முன்னால் ‘டிஆர்.,’ எனும் ஆசிரியர் என்ற மாரியாதைக்குரிய சொல்லை, பெருமையுடன் பயன்படுத்தலாம்.

இந்த சொல்லுக்கு பின்னால், ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் ஆற்றிய தன்னலமற்ற சேவை உள்ளது. ‘டிஆர்.,’ என்பது வெறும் குறியீடு மட்டுமல்ல; அது மற்றவர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அந்த தன்னலமற்ற ஆன்மாக்களுக்கு ஒட்டுமொத்த சமூகமும் காட்டும் நன்றியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link