பெர்லின்: ஜெர்மனியில், பெண்கள் உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மாலி, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் மாலி அணி 82-73 (19-17, 13-17, 31-19, 19-20) என்ற புள்ளி கணக்கில் முதல் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஹங்கேரி அணி 71-67 என, நைஜீரியாவை வென்றது.
லிவர்பூல் அணி வெற்றி
லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இப்ஸ்விச் டவுன், லிவர்பூல் அணிகள் மோதின. அலெக்சாண்டர் ஐசக் 2 கோல் (6, 9வது நிமிடம்) அடித்து கைகொடுக்க, லிவர்பூல் அணி 2-0 என முதல் வெற்றியை பதிவு செய்தது. 3 போட்டியில், ஒரு வெற்றி, 2 ‘டிரா’ என, 5 புள்ளிகளுடன் லிவர்பூல் அணி 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி (6 புள்ளி) உள்ளது.
ரியல் மாட்ரிட் ஏமாற்றம்
மாட்ரிட்: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ரியல் பெடிஸ், ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய ரியல் மாட்ரிட் அணி 0-1 என முதல் தோல்வியை பெற்றது. ரியல் பெடிஸ் அணிக்கு டிராய் பாரட் (81வது நிமிடம்) கைகொடுத்தார். 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என ரியல் மாட்ரிட் அணி 9 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பார்சிலோனா (9 புள்ளி) உள்ளது.
எக்ஸ்டிராஸ்
* இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் (‘சூப்பர் 100’) அரையிறுதியில் இந்திய வீராங்கனை மான்சி சிங் 21-16, 18-21, 21-18 என, கனடாவின் ரேச்சல் சானை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 16-21, 19-21 என, சீனாவின் வென் ஜிங் ஜுவிடம் தோல்வியடைந்தார்.
* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 13வது சீசன் வரும் அக். 10ல் துவங்குகிறது. எட்டு மாதம் நடக்கவுள்ள இத்தொடரில், 13 அணிகள், 163 போட்டியில் விளையாடுகின்றன.
* லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 0-2 (4-11, 4-11) என்ற கணக்கில் மலேசியாவின் சிவசங்கரியிடம் தோல்வியடைந்தார்.
* பெங்களூருவில், வரும் செப். 27ல் இந்தியா, பனாமா அணிகள் மோதும் சர்வதேச நட்பு கால்பந்து போட்டி நடக்க இருந்தது. ஆனால் அன்று பெங்களூரு மாரத்தான் ஓட்டம் நடக்க இருப்பதால், நட்பு கால்பந்து போட்டி ஒரு நாள் முன்னதாக செப். 26ல் நடத்தப்படுகிறது.
* வியட்நாமில், உலக கோப்பை ‘பிக்கிள்பால்’ தொடர் நடக்கிறது. முதல் சுற்றில் 4-0 என சீனாவை வீழ்த்திய இந்திய அணி, ‘ரவுண்டு-16’ போட்டியில் 4-1 என, பிலிப்பைன்சை தோற்கடித்தது. அடுத்து நடந்த காலிறுதியில் இந்திய அணி 2-4 என, அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது.
* ஜப்பானில், வாலிபால் ‘கான்டினென்டல்’ சாம்பியன்ஷிப் 23வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்திய அணி 3-0 (21-25, 26-28, 25-27) என, சீனாவிடம் தோல்வியடைந்தது.
