வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 5.9.2026 )

கொய்யா

கடந்த வாரம் : ரூ. 60.00

தற்போது : ரூ. 80.00

வரத்து மிகவும் குறைவாக உள்ளது. அதனால் விலை உயர்ந்துள்ளது. தரத்தை பொறுத்து 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

ஆயக்குடி, திண்டுக்கல்

பாக்கு

கடந்த வாரம் : ரூ. 209.00

தற்போது : ரூ. 210.00

சீசன் முடிந்தும் பாக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விலையில் பெரிய மாற்றமில்லை. பாக்குப்பழம் கிலோ 75 ரூபாய்க்கும், காய்ந்த பாக்குக்காய் 210 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலையே தொடரும்.

சந்தை

பவானி, ஈரோடு.

மஞ்சள் (விரலி)

கடந்த வாரம் : ரூ. 170.00

தற்போது : ரூ. 174.00

வரத்து சீராக உள்ளது. விலை சற்று உயர்ந்துள்ளது. தரத்தை பொறுத்து 126 முதல் 174 ரூபாய் வரை விற்பனையாகிறது. சிறிய ஏற்ற இறக்கத்துடன் இந்த விலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

பெருந்துறை, ஈரோடு.

Source link