மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் போட்டிகளின் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னமும், 3 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இதுவரை இந்திய மகளிர் அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பை இறுதி செய்துள்ளது.
இந்திய மகளிர் அபார வெற்றி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பங்கேற்ற லீக் போட்டி, துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் மகளிர் அணியில், ஓபனர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர். ஓபனர்கள் முனிபா அலி 13 (15), ஷவால் ஜுல்பிகுர் 14 (14) ஆகியோர் மட்டுமே 10+ ரன்களை அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்கள்.
இதனால், பாகிஸ்தான் மகளிர் அணி, 18.1 ஓவர்கள் முடிவில் வெளும் 55/10 ரன்களைதான் சேர்த்தார்கள்.
ஶ்ரீசரணி 4 ஓவர்களில் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். பிரேமா ராவத் 4 ஓவர்களில் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார். தீப்தி ஷர்மா 3.1 ஓவர்களில் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்திய மகளிர் அணி வெற்றி : இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், மூன்று பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஷபாலி வர்மா 12 (6), ஸ்மிருதி மந்தனா 9 (11), பிரடிகா ராவல் 4 (3) ஆகியோர் அவுட் ஆன நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 18 (18), தீப்தி ஷர்மா 12 (14) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியதால், இந்திய மகளிர் அணி, 57/3 ரன்களை எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.
பாகிஸ்தான் மகளிர் அணி, வரலாற்று தோல்வி: பாகிஸ்தான் மகளிர் அணியின் குறைந்தபட்ச டி20 ஸ்கோராக, இந்த 55 ரன்கள்தான் இருக்கிறது. இதற்குமுன், 2024ஆம் ஆண்டில், நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக, இதே துபாய் மைதானத்தில் 56 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியிருந்தனர்.
ஆசியக் கோப்பை தொடரில், இந்திய மகளிர் அணி, 6ஆவது முறையாக 10 ஓவர்களுக்குள், இலக்கை சேஸ் செய்து வென்று வரலாறு படைத்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு சிக்கல்: தற்போது, இந்திய மகளிர் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் மகளிர் அணி, அடுத்து, கடைசி லீக் போட்டியில் ஹாங் ஹாங் மகளிர் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மகளிர் அணி, சமீப காலமாகவே படுமோசமாக சொதப்பி வருகிறது. இதனால், ஹங் ஹாங் மகளிர் அணி அபார வெற்றியைப் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போட்டி, செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும்.
அதன்பிறகு, அரையிறுதி ஆட்டங்கள், செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி, செப்டம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
