தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிப்பதற்கு முந்தைய நாள் இரவே, தலைநகர் சென்னையில் ஆளும் த.வெ.க கட்சி நிர்வாகி கண்ணன் (45) கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க இளைஞரணி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ஆளும் அரசின் சட்டம் ஒழுங்கு நிலையை கடுமையாக சாடியுள்ளார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்கவிருக்கும் நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவே தலைநகர் சென்னையில் ஆளும் த.வெ.க-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சென்னை அடையாறு வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவர் த.வெ.க கட்சியின் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். நேற்றிரவு மர்மநபர்கள் சிலர், அவரை சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தலைநகரிலேயே நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் சட்டம் ஒழுங்கு நிலையை கடுமையாக சாடியுள்ளார்.
அவரது பதிவில், “நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், கொல்லப்பட்ட கண்ணன் தன் உயிருக்குப் பாதுகாப்பு கோரியே தற்போதைய ஆளும் கட்சியில் இணைந்திருந்தார் எனவும், ஆனாலும் அவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்ற பின்னணி கொண்டவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை” என குறிப்பிட்டுள்ள அவர், தலைநகரிலேயே சாலையில் இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதைக் குறித்து அரசு கவலைப்பட வேண்டுமா, அல்லது சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அனைவரும் தஞ்சம் புகும் இடமாக த.வெ.க இருப்பதைக் குறித்து கவலைப்பட வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சட்டப்பேரவையில் நடைபெறும் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் தொடர்ச்சியாக, இந்தச் சம்பவம் அரசியல் கட்சிகளிடையே மேலும் வாக்குவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தி.மு.க இளைஞரணி தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது: “நாளை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை.
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
