குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டியாக தவெக..!! எதை நினைத்து வருந்துவது..? விளாசிய உதயநிதி ஸ்டாலின்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

சென்னை அடையாறு அடுத்த வண்ணாந்துறையை சேர்ந்தவர் கண்ணன், வயது 45. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதிமுகவில் வட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த இவர், சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். சனிக்கிழமை இரவு வெளியே சாப்பிட சென்றவர், அங்கிருந்து ராமசாமி அவின்யூவில் உள்ள அவரது அலுவலகத்துக்கு போனார்.

அப்போது கண்ணன் செல்லும் வழியை நோட்டமிட்ட கும்பல், அலுவலக வாசலில் சுற்றி வளைத்தது. இரண்டு பைக்குகளில் வந்த 6 பேர், அவரை ஓட ஓட துரத்தி சென்று வெட்டினர். அந்த கும்பல் தலையில் குறி வைத்து வெட்டியதால் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ”நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் தவெகவில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் வெற்றி சட்டம் ஒழுங்கு நிலை!

இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக தவெக இருப்பதை நினைத்து வருந்துவதா? இதற்கும் திமுகவை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.

அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட…

— Udhay (@Udhaystalin) September 6, 2026

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி கணக்கெடுப்பு..!! சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்..!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!

Source link