Bigg Boss Tamil Season 10 Launch Updates Today:தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பையும், அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பையும் கொடுக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சுமார் 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பி வரும் நிலையில், ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாவது வழக்கம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 7-வது சீசன் வரை கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8-வது சீசனில் இருந்து அவர் விளகியதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 8 மற்றும் 9-வது சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வெற்றிகரமாக முடிந்தது.
கடந்த ஆண்டு, நடைபெற்ற 9-வது சீசனில், பிரபல சீரியல் திவ்யா கணேஷ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதேபோல் நடிகர் சபரிநாதன் 2-வது இடமும், விக்கல்ஸ் விக்ரம் 3-வது இடமும் பிடித்தனர். முதல் நாளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை விடவும், வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த போட்டியாளர் தான் சாம்பியனாக மாறியுள்ளனர். 8-வது சீசனில், முதல் நாளில் இருந்தே போட்டியில் இறங்கிய முத்துக்குமரன் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
-
Sep 06, 2026 16:49 IST
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடக்க விழாவை எப்போது, எங்கே பார்ப்பது?
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் தொடக்க விழா, இன்று (செப்டம்பர் 6) மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. ரசிகர்கள் இந்த எபிசோடை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் விஜய் சேனல்களில் காணலாம்.
-
Sep 06, 2026 16:47 IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா சீரியல் நடிகர் ஆர்யன்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கவிருக்கும் நிலையில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களின் பட்டியலை வெளியிடுவார் என்றாலும், பங்கேற்க உள்ள போ்டியாளர்கள் குறித்த யூகமான பட்டியல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில் ஒரு புதிய அறிக்கையின்படி, தொலைக்காட்சி நட்சத்திரமும், ‘குக்கு வித் கோமாளி சீசன் 6’-ன் முதல் ரன்னர்-அப்புமான ஷபானா ஷாஜஹானின் கணவரான நடிகர் ஆர்யன் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
Sep 06, 2026 16:45 IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரசாந்த் ரங்கசாமி விலகிவிட்டாரா?
யூடியூபரும் திரைப்பட விமர்சகருமான பிரசாந்த் ரங்கசாமி, பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் பிரதான போட்டிக்குள் நுழைவதற்கு முன்பே வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக, அவர் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று வதந்திகள் பரவி வந்தன. இருப்பினும், தற்போது பிரசாந்தே தான் இனி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் மறைமுகமான ஒரு பதிவில் அவர், “அன்புக்கும் வெறுப்புக்கும் நன்றி. இனி வேலைக்குத் திரும்புகிறேன்! வருத்தமோ ஏமாற்றமோ இல்லை! இதுதான் நிலைமை!” என்று எழுதியிருந்தார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என ஊகிக்கப்பட்ட ஒரு சில போட்டியாளர்களில் பிரசாந்த் ரங்கசாமியும் ஒருவர்.
-
Sep 06, 2026 16:43 IST
பிக்பாஸ் தமிழ் 10: போட்டியாளர்கள் இவர்கள் தானா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகர் குமரன் தங்கராஜன், நடிகர் பிளாக் பாண்டி, சீரியல் நடிகர் வினோத் பாபு, உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க…
-
Sep 06, 2026 16:39 IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் – 3-வது முறையாக விஜய் சேதுபதி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்டம்பர் 6) மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், விஜய் சேதுபதி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால், இந்த ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி முந்தைய சீசன்களை விட இரண்டு மடங்கு விறுவிறுப்பை அதிகரித்துள்ளது. இந்த தொடக்க விழாவில், போட்டியாளர்களைத் தொகுப்பாளர் அறிமுகப்படுத்துவார். இது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
