புதுடில்லி: புதுடில்லியில் செப்.12ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாடு நிகழ்வால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், 2025ம் ஆண்டு செப்.3 மற்றும் செப்.4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஜிஎஸ்டி வரி விகிதங்கள், வரி விதிப்பு அடுக்குகளில் மறுசீரமைப்பு மேற்கொள்வது என முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர், 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2026ம் ஆண்டு செப்.12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தனர். இந் நிலையில், செப்.12ம் தேதி நடக்கவிருந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதே செப்.12 மற்றும் செப்.13 தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு டில்லியில் நடக்க உள்ளதால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்.7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில், மாதம்தோறும் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமாக பரிமாற்றம் செய்யும் வணிக நிறுவனங்களின் ஜிஎஸ்டி பதிவை எளிதாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
