கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இனி தங்களது பெயர்களுக்கு முன் டி.ஆர் (“Tr”) என்ற முன்னீட்டை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று கர்நாடக அரசு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட புதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
கர்நாாடக மாநிலம், விஜயநகரா மாவட்டம் குட்லிகியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் ஆற்றிவரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் தங்களது பெயர்களுக்கு முன் டி.ஆர் (“Dr”) என்றும், பேராசிரியர்கள் ப்ரூப் (“Prof”) என்றும் பயன்படுத்துவது போல, இனி ஆசிரியர்களும் தங்களது பெயர்களுக்கு முன் டி.ஆர் (“Tr”) என்ற முன்னீட்டை பயன்படுத்தலாம்.
கர்நாடகாவில் சுமார் 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். சமூகத்தில் நாம் இரண்டு வகையான மனிதர்களை கடவுளாகக் கருதுகிறோம். ஒருவர் நமக்கு பிறப்பைக் கொடுக்கும் பெற்றோர்; மற்றொருவர் நமது வாழ்க்கையில் சரியான வழியைக் காட்டி வழிநடத்துபவர்கள். இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சமூகத்திற்கு ஆசிரியர்கள் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்க முடிவு செய்தோம்,” என்று சிவகுமார் கூறினார்.
மேலும், “ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைப் போலவே ஆசிரியர்களும் நாட்டின் தூண்களாக உள்ளனர். அவர்களை அங்கீகரிப்பது அரசின் பொறுப்பு” என்றும் சிவகுமார் தெரிவித்தார். இந்த டி.ஆர் (“Tr”) முன்னீட்டை வெறும் கௌரவத்தைக் குறிக்கும் அடையாளமாக மட்டுமே இருக்கும். இதன் மூலம் ஆசிரியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதி அல்லது கல்விசார் அந்தஸ்து எதுவும் கிடையாது. ஆசிரியர் பணிக்கு தனித்துவமான தொழில்முறை அடையாளத்தை வழங்குவதே இதன் நோக்கம் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் டி.கே.சிவகுமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நோயாளிகளைக் குணப்படுத்தும் ஒவ்வொரு மருத்துவர், கட்டிடங்களையும் கட்டமைப்புகளையும் உருவாக்கும் ஒவ்வொரு பொறியாளர், நமக்கு உணவளிக்கும் ஒவ்வொரு விவசாயி, மக்களுக்குச் சேவை செய்யும் ஒவ்வொரு அதிகாரி, புதியவற்றை உருவாக்கும் ஒவ்வொரு தொழில்முனைவோர் மற்றும் நம்மை வழிநடத்தும் ஒவ்வொரு தலைவரின் பின்னாலும் ஓர் ஆசிரியர் இருக்கிறார். அவர்களின் திறமையை முதன்முதலில் அடையாளம் கண்டு, அவர்களால் என்ன சாதிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர் அந்த ஆசிரியர்.
இந்த ஆசிரியர் தினத்தில், ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை தனித்துவமான மரியாதையின் அடையாளம் மூலம் கௌரவிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இன்று முதல் கர்நாடக ஆசிரியர்கள் தங்களது பெயர்களுக்கு முன் பெருமையுடன் டி.ஆர் (‘Tr.’) என்ற முன்னீட்டை பயன்படுத்தலாம். இது வெறும் இரண்டு எழுத்துகளாக இருக்கலாம். ஆனால், அது வாழ்நாள் முழுவதும் அவர்கள் ஆற்றிய சேவையைப் பிரதிபலிக்கிறது. டி.ஆர் (‘Tr)’ என்பது வெறும் பட்டம் அல்ல; பிறரின் வாழ்க்கையை வடிவமைப்பதற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த ஆசிரியர்களுக்கு சமூகத்தின் அங்கீகாரம்.
தனது ஆசிரியர்களைக் கௌரவிக்கும் சமூகம், தனது எதிர்காலத்தையே கௌரவிக்கிறது. மேலும், கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
