பதவி ஆசை யாரை விட்டது.: அந்துமணி பதில்கள்!

சோ.ராம் மணி, திண்டுக்கல்:

சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பதற்றம்?

சட்டசபைக்கு புதியவர் தான் என்றாலும், தமிழை நன்றாகக் கற்றிருந்தால், இப்படி திணற வேண்டி இருக்காது. சீக்கிரம் தேறி விடுவார் என நம்புவோம்!

கி.பாலமுருகன், ராமநாதபுரம்:

நடிகர் தனுஷ், ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி வருகிறாரே?

பதவி ஆசை யாரை விட்டது… தனுஷ் மட்டும் விதிவிலக்கா என்ன?

கி.பாலமுருகன், ராமநாதபுரம்:

நடிகர் தேவனை, கேரள த.வெ.க.,வின் தலைவராக நியமிக்க, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளாராமே?

கேரளாவிலும் கால்பதிக்க பார்க்கிறது, த.வெ.க., கொஞ்சம் நிதானம் தேவை. முதல்வர் விஜய் விழித்து கொள்ள, நேரம் வந்து விட்டது. மற்றவர்களின் துதி பாடல்களுக்கு பலிகடாவாகி விடக் கூடாது!

கி.பாலமுருகன், ராமநாதபுரம்:

‘வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், வாழும் நாட்டுக்கும், தாய் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்…’ என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், அமெரிக்காவில் பேசியிருக்கிறாரே?

சரியாக கூறியிருக்கிறார். காங்., ராகுல் போல் எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும், இந்தியாவை குறை கூறி பேட்டி கொடுப்பதை போல், பேச, செயல்பட கூடாது!

பா.ஜெயப்ரகாஷ், தேனி:

‘அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் பக்கம் நின்று, உண்மைகளை எடுத்துச்சொல்லும் பணியை, ‘தினமலர்’ தொடரவேண்டும்’ என்ற, தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை பற்றி?

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவர் வாழ்த்து சொல்லி இருக்கிறாரே… அதுவே அவரது மிகச் சிறந்த பண்பை எடுத்துக் காட்டுவதற்கான மிகப் பெரிய சான்று!

மு.நாகூர், சுந்தரமுடையான்:

இந்திய விமானப்படையின், முதல் பெண் துணை தளபதியாக, ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா பொறுப்பேற்றுள்ளாரே?

இந்திய விமானப்படையின் ‘சிங்கப் பெண்!’

Source link