சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் பதிலுரை

சென்னை: தமிழக சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் இன்று பதிலுரை வழங்க உள்ளார்.

தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்கு பின், இன்று கூடுகிறது. சட்ட சபையில் கடந்த 3ம் தேதி, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை, மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள், விவாதத்தில் பங்கேற்று பேசினர். இன்று சட்டசபையில் முதல்வர் விஜய், விவாதத்திற்கு பதில் அளிக்க உள்ளார்.

அதன்பின், வணிக வரித்துறை, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுத்துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.

அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்ச்செல்வன், ரஞ்சித்கு மார், ராஜிவ் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

Source link