சட்டசபையில் இன்று முதல்வர் விஜய்யின் பதிலுரை.. எதிர்க்கட்சிகளுக்கு தவெக வைக்கபோகும் செக் -சமாளிக்குமா திமுக? – chief minister vijay to reply today (sept. 7) to the debate on the police department’s demands for grants.

மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.கடந்த செப் 3-ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலை, குற்றசம்பவங்கள் தொடர் காவல் மரணங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை எனக் குற்றம்சாட்டினார்.

முதல்வர் விஜய் சட்டசபை பதிலுரை

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் விஜய்நான் அவையில் இல்லாவிட்டாலும், யார் என்ன கேள்வி எழுப்பினார்கள் என்பது எனக்கு தெரியவரும். அதற்கான உரிய பதிலை வழங்குவேன். எனவே, அன்றைக்கு அவையை விட்டு யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இப்போது யார் ஓடிப் போனார்கள் என அனைவருக்கும் தெரியும் எனக் கிண்டலாகக் கூறினார்.

இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இத்தகைய சூழலில் இன்று முதல்வர் விஜய் எதிர்க்கட்சிகளுக்கு என்ன மாதிரியான பதிலளிக்க போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கு

தவெக அரசு பொறுப்பேற்றது முதல் திமுக முன்னாள் அமைச்சர்களின் மீது போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளை தூசிதட்ட ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், டாஸ்மாக் டெண்டர் முறைகேடு ஊழல்,மின்சாரத்துறை, பொதுபணித்துறை, நெடுஞ்சாலைத்துறை,கனிமவளக்கொள்ளை,பத்திரபதிவு, நகராட்சித்துறையில பணிநியமன முறைகேடு என நிலுகையில் உள்ள வழக்குகளுடன் சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் டெண்டர் முறைகேடு என முக்கியத்துறைகளில் ஊழல் நடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏ.வ.வேலு, செந்தில் பாலாஜி,உள்ளிட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.மேலும்,சட்டபேரவையின் போது 3துறைகளின் ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன் எனது மேஜையில் அமைச்சர் வைத்துள்ளார். அதை வெளியிட வைத்துவிடாதீர்கள் என திமுகவினருக்கு முதல்வர் விஜய் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதன்பிறகு சட்டமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர்களான ஏ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆவேசமாக பேசிவந்த நிலையில், அவர்களின் பேச்சின் ஒரு அமைதி தெரிந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்,திங்கட்கிழமை அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன், யாரும் ஓடிவிடக் கூடாது எனக் முதல்வர் பேசிச் சென்ற மறுநாளே கே.என். நேரு இல்லத்தில் இந்த சோதனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முந்தயநாள் உதயநிதி கைது செய்யப்பட்டார். இது திமுகவினருக்கு கொடுக்கும் மெசேஜ் ஆக பார்க்கப்பட்டது.

விஜய் வெளியிடப்போகும் 3 முக்கிய கோப்புகள்

சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், திங்கட்கிழமை முதல்வர் அளிக்கவுள்ள பதிலளிக்க உள்ளார். மேலும் ஊதியம் வழங்கல் திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார். எம்.எல்.ஏ.க்களுக்கு கார்கள் வழங்க உள்ள நிலையில் ஓட்டுநர் ஊதியம், எரிபொருள் செலவிற்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளார். மற்றும் அவர் வெளியிடப்போவதாகக் கூறப்படும் 3 முக்கியக் கோப்புகள் (Files) குறித்த தகவல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல, திமுகவின் பிற முக்கியப் பிரமுகர்களான துரைமுருகன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் போன்றவர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த புகார்கள் மீது அடுத்து நடவடிக்கைகள் பாயுமா அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் தற்போதைய அரசியல் களத்தின் முதன்மை விவாதமாக மாறியுள்ளது.

Source link