ஐபிஎல் 2026 சீசன் முடிந்ததுமே, டிரேடிங்கில் வெளியேற விரும்புகிறேன் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம், ஹர்திக் பாண்டியா தெரிவித்துவிட்டார். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடிங்கில் அனுப்புங்கள் என ஹர்திக் பாண்டியா தெரிவித்ததும், சிஎஸ்கே நிர்வாகத்துடன் தொடர் பேச்சு வார்த்தையை நடத்தினார்கள்.
ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஷிவம் துபே, கலீல் அகமது ஆகியோரை விட்டுக்கொடுத்தாலே, ஹர்திக்கை சுலபமாக வாங்கிவிட முடியும் என சிஎஸ்கே நிர்வாகம் நினைத்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஒரு இளம் பேட்டரை கேட்டது. அதாவது, ஷிவம் துபேவுடன் ஒரு இளம் பேட்டர் வேண்டும். அந்த இளம் பேட்டர் ஆயுஷ் மாத்ரே, டிவோல்ட் பிரேவிஸ் யாராக இருந்தாலும் பரவாயில்லை எனத் தெரிவித்தது.
ஆனால், சிஎஸ்கே நிர்வாகம், இதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு 32 வயதாகிறது. இதனால், அவருக்கு மாற்றாக, பார்மில் இருக்கும் இளம் பேட்டரை விடுவிக்க முடியாது. துபே, கலீலை மட்டுமே கொடுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்ததால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், சிஎஸ்கே உடனான பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பேச ஆரம்பித்தது.
கேகேஆர் அணியிடம் ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா ஆகியோரை கேட்ட நிலையில், வருண் சக்ரவர்த்தி மற்றும் ராணாவை மட்டுமே அனுப்ப முடியும் எனத் தெரிவித்தது. இப்படி பேச்சு வார்த்தை நடந்து வந்த சமயத்தில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை தொடர்புகொண்ட ஹர்திக் பாண்டியா, ‘‘நான் சிஎஸ்கேவுக்குதான் செல்வேன், அங்கு மட்டுமே அனுப்ப முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால், ஏலத்திற்கு அனுப்புங்கள்’’ என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.
இதனால் தற்போது, வேறு வழியில்லாமல் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகம், துபே மற்றும் கலீலை மட்டுமே அனுப்ப முடியும் என உறுதியாக இருக்கிறது. இதனால், வேறு வழியில்லாமல் சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இருக்கிறது.
சிஎஸ்கேவுக்கு நல்ல விஷயம்: ஒருவேளை, ஹர்திக்கை டிரேடிங்கில் வாங்கிவிட்டால், அது சிஎஸ்கேவுக்குதான் நல்ல விஷயமாக இருக்கும்.
என்ன காரணம்? சிஎஸ்கேவில் தற்போது சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் இடையில் கேப்டன்ஸி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரும், தனக்குதான் கேப்டன் பதவியை தர வேண்டும் என உறுதியான முடிவில் இருக்கிறார்கள். தற்போது, ஹர்திக்கை வாங்கிவிட்டால், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி சென்றுவிடும். இதனால், இருவரும் பிரச்சினை செய்ய மாட்டார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சனைவிட ஹர்திக் பாண்டியா சிறந்த கேப்டன்தான். இதனால், அணியை வலுப்படுத்த முயற்சி செய்வார்.
ஹர்திக் பாண்டியா ஒரு ஸ்டார் கேப்டன் என்பதால், சிஎஸ்கேவில் மேலும் பல ரசிகர்கள் இணைவார்கள். இதனால், அணியின் மதிப்பும் கூடும்.
ஹர்திக்கும், தோனியும் சிறந்த நண்பர்கள். இதனால், தோனியுடன் இணைந்து, அணியை மீண்டும் பழைய பார்முக்கு கொண்டு வர முடியும். இதனால்தான், ஹர்திக்கை வாங்குவதில் தோனி தீவிரம் காட்டி வருகிறார்.
ஹர்த்திக்கால் இன்னமும் 4-5 வருடங்கள் வரை விளையாட முடியும் என்பதால், ஹர்திக்கை வாங்குவது சிஎஸ்கேவுக்கு பெரிய அளவில் பயனளிக்கும் எனக் கருதப்படுகிறது.
