CM Vijay Speech In TN Assembly Live Updates: 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
அந்த வகையில் முதலமைச்சர் விஜய் என்ன மாதிரியான பதிலை சொல்லப்போகிறார்? ஏற்கனவே இந்த துறைகளுக் கான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்ட நிலையில், மேலும் புதிய அறிவிப்புகளை எதுவும் வெளியிடுவாரா? என்பது போன்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, வனத்துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, சுற் றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறைகளின் மானியக் கோரிக்கை அறிவிப்புகள், அதன் மீதான விவாதங்களும், அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் பதிலுரையும் இருக்கும்.
