சட்டபேரவை 3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரை வழங்கினார் முதல்வர் விஜய்.அப்போது பேசியவர், திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பே நடக்கும். ஊழல் என்று சொன்னதும் எல்லாரும் எழுந் துவிடுவார்கள். ஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் கேட்பார்கள்.. அண்ணா , எம்.ஜி.ஆர் வழியில் தற்போது முதல்வர் விஜய் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, முறைக்கேட்டை முறையாக திமுகவினர் செய்துள்ளனர். விஞ்ஞான ஊழல் என்பது தான் இது.
முதல்வர் விஜய் பதிலுரை
கரூர் கேங் என்ற பெயரில் வசூலில் ஈடுப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் பேசினார். அப்போது தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கைவிடுத்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பேச அனுமதி அளியுங்கள் அமளியில் ஈடுப்பட்டனர்.பின்னர் முதலமைச்சர் விஜய் பேசும்போது, ஆரம்பத்திலிருந்தே கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியது மிகப்பெரிய தவறு என்று கூறினார். பின்னர் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், சட்டமன்றத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எழுப்பப்பட்ட எந்தவொரு கேள்விக்கம் முறையான பதிலளிக்காமல், வெறும் பஞ்ச் டயலாக்குகளையும், திசைதிருப்பும் உத்திகளையும் மட்டுமே முதல்வர் விஜய்யின் பதிலாக இன்று கொடுத்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கு கேள்விக்கு பதில் இல்லை?
ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என கேள்வி எழுப்பினால், அதற்குப் பதிலளிக்காமல் திமுக ஆட்சிக் காலத்தில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி விவாதத்தைத் திசைதிருப்புகின்றனர். “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்பதே நமது நிலைப்பாடு என்று கூறினார்.
மேலும் ஐபிஎல் போட்டியின் போது அரங்கில் அமர்ந்துபோதை பொருள் பயன்படுத்திய அமைச்சர்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எதிர்க்கட்சி தரப்பில் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய பின்னரே, கடந்த மூன்று நாட்களாக அமைச்சர்கள் அவசர அவசரமாக களத்திற்குச் சென்று பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சியில் ஈடுப்பட்டனர்.
மிசா சட்டம் குறித்துப் பேசுவதற்கு முதலமைச்சருக்கு தகுதி இல்லை
ஆளுங்கட்சியினரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வருகிறது.சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடந்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு கேட்கப்பட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால்,சட்டமன்றத்தில் 1970-களின் நிகழ்வுகள், சர்க்காரியா கமிஷன் மற்றும்மிசா (MISA)சட்டத்தைப் பற்றி முதல்வர் பேசுகிறார் . சர்க்காரியா கமிஷனில் தவறுகள் எதுவுமில்லை என அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசா சட்டம் குறித்துப் பேசுவதற்கு முதலமைச்சருக்கு எவ்வித தகுதியும் இல்லை.
சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் மக்களால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்து, அது நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே தலைவர் யார் என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஆனால் திமுகவின் தலைவர்களோ, முன்னாள் அமைச்சர்களோ இதுவரையிலும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை.
உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
அமலாக்கத்துறை (ED) கூறியுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையில் மட்டுமே உள்ளன; அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அவற்றை மட்டுமே சட்டப்பேரவையில் படித்துக் காட்டி, உண்மையான நிர்வாகக் கோளாறுகளை ஆளுங்கட்சி மறைக்கப் பார்க்கிறது என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மேலும், பெண்களைப் பற்றித் தவறாகப் பேசக்கூடாது, இரட்டை அர்த்தத்திலோ அல்லது மூன்று அர்த்தங்களிலோ பேசக்கூடாது என்று உபதேசம் செய்வதற்கு இந்த முதலமைச்சருக்கு எவ்விதத் தகுதியும் கிடையாது. இவர் நடித்த படங்கள், வைத்த காட்சிகள் மற்றும் பாடிய பாடல்கள் பற்றிப் பேசத் தொடங்கினால் இவர்களால் அதைத் தாங்கவே முடியாது” எனக் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
