திமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரனை கை கொடுத்து தூக்கிய முதல்வர் விஜய்.. அரசியல் மோதலுக்கு நடுவே மனிதநேயம் – வைரல் வீடியோ – cm vijay help dmk mla durai chandrasekaran assembly incident viral video

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார்.அப்போது கூறுகிட்ட திமுகவினர் பேச அனுமதி கேட்டு கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந் து எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் கூறினார். பின்னர் சபாநாயகர் அனுமதியளிக்க மறுப்பு தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் பேசும்போது, ஆரம்பத்திலிருந்தே கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியது மிகப்பெரிய தவறு… நீங்கள் அலுத்துப்போகிற அளவிற்கு குரல் கொடுத்துப் பார்த்தீர்கள். ஆனாலும், முதலமைச்சர் முழுமையாகப் பேச்சை முடித்திருக்கிறார்.

உடனே திமுகவினர் சபாநாயகர் இருக்கை முன் வந்து கோஷங்களை எழுப்பினர்.இதனையடுத்து அவையின் மையத்தில் கீழே அமர்ந் து திமுகவினர் தர்ணாவில் ஈடுப்பட்டனர். அந் த நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் எழ முயன்ற போது தடுமாறினார். இதனை கவனித்த முதல்வர் உடனே தன்னுடைய மேசையை நகர்த்தி அவருக்கு கை கொடுத்து தூக்கிவிட்டார். இதனை கண்டு திமுகவினர் சிரித்தனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Source link