₹703 கோடி காப்பீடு செய்யப்பட்ட மும்பை விநாயகர் சிலை

விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களுக்கு இந்தக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உயிருக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விழாவில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்பிற்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது தங்களின் கடமை என்று அந்த மண்டலின் செய்தித் தொடர்பாளர் அமித் பை கூறியுள்ளார்.

அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீடு, விழா பந்தல் மற்றும் பாதிப்புகளுக்கான காப்பீடு இதில் அடங்குகிறது. விழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் இந்த காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற 12-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ‘விராட் தர்ஷன்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பக்தர்களுக்கு முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்முறை காகிதப் பயன்பாட்டைக் குறைத்து, காகித ரசீதுகளுக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ரசீதுகள் வழங்கப்பட உள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link