கொலம்​பி​யா, குயின்​டியோ மாகாணத்தில் உள்ள அர்மேனியா​ நகரைச் சேர்ந்தவர் மிரி​யம் (67 ). இவர் பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய தகவலைச் சேகரித்து, அதை மற்றவர்களுக்கு விற்​பதை ஒரு தொழிலாகவே செய்து வரு​கிறார். இந்த வரு​மானத்​தைக் கொண்டு அவர் இரண்டு வீடு​களையும் வாங்​கி​யுள்​ளார். இது சம்பந்தமான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இது குறித்துப் பேசிய மிரியம், தன்னை ஒரு தொழில்முறை வதந்தி சேகரிப்பாளர் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதன்படி, அண்டை வீட்டாரின் குடும்ப பிரச்சனைகள், கள்ளக்காதல்கள் மற்றும் சண்டைகள் போன்ற ரகசியங்களைச் சேகரித்து ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு இவர் விற்பனை செய்துவருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு சொந்த வீடுகளையும் வாங்கியுள்ளார்.
சேகரிக்கும் தகவல்கள் தவறாகக் கூடாது என்பதற்காக, மிரியம் ஒரு தனி குறிப்பேட்டையும், புகைப்பட ஆவணங்களையும் தனது வீட்டில் பராமரித்து வருகிறார். அந்த பலகையில், பக்கத்து வீட்டு மனிதர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட முறைகேடான உறவுகள், சண்டைகள் குறித்த அனைத்து குறிப்புகளையும் அவர் சேகரித்து வைத்துள்ளார்.
மேலும், தான் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வதந்திகளைப் பரப்புவதில்லை என்றும், முறையான சான்றுகளுடன் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குத் தகவல்களை விற்பதாகவும் அவர் உறுதியளிக்கிறார். இதன் காரணமாகவே அப்பகுதி மக்கள் இவரை ’வதந்திகளின் ராணி’ என்று அழைக்கிறார்கள்.
இவரைப்போன்றே சிலர் இது போன்ற தொழிலில் ஈடுபட முயன்றுள்ளனர். ஆனால், இவரது பல வருட அனுபவம் மற்றும் தகவல் திரட்டும் திறன் ஆகியவற்றின் முன்னால் மற்றவர்களால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை என்று கூறப்படுகிறது.
