மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல் அறிவிப்பு- தேர்தல் ஆணையம் – maduranthakam dharapuram constituency byelection date announced on october 6 by eci

தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டிற்கும் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சற்றுமுன் விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், சட்ட சிக்கல்கள் இல்லாத 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடைமுறை
தேதி
வேட்புமனு தாக்கல் தொடக்கம்
செப்டம்பர் 9
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்
செப்டம்பர் 16
வேட்புமனுக்கள் மீது பரிசீலனை
செப்டம்பர் 17
திரும்ப பெற கடைசி நாள்
செப்டம்பர் 19
வாக்குப்பதிவு நாள்
அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை
அக்டோபர் 9
தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் நாள்
அக்டோபர் 11
Source link