சுடுகாட்டில் சாம்பலான பெண்; மீண்டும் வீட்டிற்கு வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள நவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி (28). இவர் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி அன்று காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிவனியைத் தேடி அலைந்தனர். இருப்பினும், சிவானி கிடைக்கவில்லை. இந்நிலையில், அதே ஆண்டு ஜூலை மாதத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.   

அந்த சடலத்தின் கையில் கட்டப்பட்டிருந்த கயிறு மற்றும் மற்றும் விரலில் இருந்த மோதிரத்தினைக் கொண்டு, இறந்தது சிவானி தான் என குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரது உடலுக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்து, தகனம் செய்தனர். மேலும், தன் மகள் வரதட்சணை கொடுமையால் தான் இறந்துள்ளார் என, சிவானியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்தனர். 

இந்நிலையில், தற்போது 27 மாதங்கள் கழித்து மீண்டும் சிவானி வீடு திரும்பியுள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இதனிடையே, சிவானி உயிரோடு இருக்கிறார் என்றால், இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது யாருடைய உடல்? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவானி பாரா பகுதியில் ஜாவேத் என்பவருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எரிந்து சாம்பலாகிவிட்டார் என்று நினைத்த குடும்பத்தினர், தற்போது சிவானி திரும்ப வந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.  

Source link