வாழ்க்கை பயணத்தில் எல்லோருக்கும் தொடக்கத்திலேயே வெற்றி கிடைத்து விடுவதில்லை. பலருக்கு இளமைக்காலம் முழுவதும் கடுமையான போராட்டங்களும், உழைப்புக்கு ஏற்ற பலனின்றி தொடர் தோல்விகளுமே மிஞ்சும். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட வயதிற்குப் பின்னரே சிலரது ஜாதகத்தில் கர்ம காரகனான சனியும், சுப பலன்களை அள்ளித்தரும் குருவும் முழுமையான பலனை அளிக்கத் தொடங்குவர்.
குறிப்பாக 40 வயதை கடந்த பின்னர், இளம் வயதில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் அனுபவமாக மாறி, எதிர்பாராத அதிர்ஷ்டமும் அபரிமிதமான செல்வமும் தேடிவரும் யோகம் சில ராசிகளுக்கு அமைகிறது. அவ்வாறு 40 வயதிற்கு மேல் சிகரத்தைத் தொடும் ராசிகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ரிஷபம்:
சுக்கிரனை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், இளம் பருவத்தில் பல தடைகளையும் கடினமான உழைப்பையும் சந்திக்க நேரிடும். எவ்வளவு உழைத்தாலும் உரிய அங்கீகாரமும் வருமானமும் கிடைக்காமல் இவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். ஆனால் 40 வயதைக் கடந்த பிறகு குருவின் சுபப் பார்வையும் சுக்கிரனின் வலுவான அனுகூலமும் இணைந்து சக்திவாய்ந்த தன யோகத்தை உண்டாக்கும். இதன் மூலம் குறைந்த உழைப்பிலேயே மிகப்பெரிய அளவிலான செல்வச் சேர்க்கை உண்டாவதுடன், சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழும் கௌரவமும் அந்தஸ்தும் இவர்களை தேடிவரும்.
கன்னி:
புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள், ஆரம்ப கட்டத்தில் தங்களின் சுய வலிமையை உணராமல் பிறரின் ஆதரவை நாடியே அதிக காலத்தை வீணடிப்பார்கள். இதனால் உரிய முன்னேற்றம் கிடைக்காமல் தடுமாறுவர். ஆனால் 40 வயதை எட்டியவுடன் இவர்களது உள்ளுணர்வும் மறைந்திருந்த புத்திக்கூர்மையும் முழுமையாக வெளிப்படும். தனது சொந்த திறமையையும் புத்திசாலித்தனத்தையும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நேர்த்தியாகப் பயன்படுத்தி, அசுர வளர்ச்சி அடைந்து வியக்கத்தக்க வகையில் பணத்தை ஈட்டுவார்கள்.
நீதிமானான சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற மகர ராசிக்காரர்கள், விசுவாசத்திற்கும் கடின உழைப்பிற்கும் பெயர் போனவர்கள். வாழ்வின் முற்பகுதியில் இவர்கள் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிவது போன்ற கடும் சோதனைகளைச் சந்திப்பார்கள்; இருப்பினும் பொறுப்புகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். 40 வயதிற்குப் பின், சனி பகவான் இவர்கள் பட்ட கஷ்டங்களுக்கான கர்ம பலனை இரட்டிப்பாக திருப்பி தர தொடங்குவார். அதன் பின்னர் தொட்ட காரியங்கள் அனைத்தும் பொன்னாகும்; தொழில் சாம்ராஜ்யம், அசையா சொத்துக்கள், அதிகாரப் பதவிகள் என சமூகத்தில் உச்சபட்ச வெற்றியை ருசிப்பார்கள்.
குட் நியூஸ்..! கேஸ் சிலிண்டருக்கு இனி 45 நாட்கள் காத்திருக்க தேவையில்லை..! மத்திய அரசு தளர்வு அறிவிப்பு..!
