மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தரலாம் என தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட அதிமுக சார்பில் இன்று முதல் செப்டம்பர் 10-ம்தேதி வரை விருப்ப மனு விநியோகம்.
அதிமுக எல்எல்ஏக்கள் ராஜினாமாவால் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
நாளை முதல் இரண்டு தொகுகளுக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் விருப்ப மனு பெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 10-ம்தேதி மாலை 6 மணிக்குள் மனு தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
