Chennai News LIVE Updates: மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்

Tamil Nadu News LIVE

சென்னையில் இன்று (செப்டம்பர் 8, 2026) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி (CNG) ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே நீடிக்கிறது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனையாகி வருகின்றன.

அதேபோல், வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தும் சி.என்.ஜி எரிபொருளின் விலையிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிலோகிராம் சி.என்.ஜி வாயு ரூ.97.00 என்ற நிலையான விலையில் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம்

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை பெறப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது.

  • Sep 08, 2026 11:48 IST

    சகிக்கவே முடியவில்லை: விஜயின் சட்டசபை பேச்சு குறித்து கே. சுப்பராயன் சாடல்

    சட்டமன்றத்தில், சட்டமன்ற ஜனநாயகம் பட்ட பாடு, தாளம் படுமா? தறிபடுமா? முதல்வர் பேசிய முறை, அவரது உடல் மொழி, தம்பி உனக்குத் தெரியுமா? என்று கேட்ட தோரணை.. சகிக்கவே முடியாமல், தப்பித்தோம் பிழைத்தோம் என ஜனநாயகம் ஓடி ஒளிந்து கொண்டது. ஓடிவிடாதீர்கள் என்று சொல்லி விட்டுப் போனவர், ஜனநாயக மரபை ஓட, ஓட விரட்டி அடித்து விட்டார்!?

    -கே.சுப்பராயன் MP, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

  • Sep 08, 2026 11:46 IST

    ஸ்டாலின் குறித்து உருவக் கேலி: விஜய்க்கு சண்முகம் கண்டனம்

    மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல

    அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்



Source link