தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த சிதம்பரம் எல் எல் ஏ தமீமுன் அன்சாரி, அனைத்து திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் மட்டுமே அவையில் பங்கேற்றார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் பதில் உரை அளித்தபோது திமுகவினர் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று கூடிய சட்டமன்றத்தில் முதல்வர் உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
சபாநாயகர் மறுப்பு, திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்து, முதல்வர் ஜோசப் விஜயின் உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க திட்டவட்டமாக மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதனால் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்றினர்.
அவை நடவடிகைகளில் பங்கேற்ற தமிமூன் அன்சாரி
இந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மமக தலைவர் எம்எல்ஏ ஜவஹருல்லா உள்ளிட்ட திமுகவின் பிற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் வெளியேறிய நிலையில், மஜக தலைவர் சிதம்பரம் எம்.எல்.ஏ தமிமூன் அன்சாரி மட்டும் தொடர்ந்து அவையில் பங்கேற்றார். முன்னதாக நேற்று எதிர்க்கட்சி தலைவர் உதய நிநி ஸ்டாலின் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டாத கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம் எல் ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் அப்போது தேதிமுக பொதுச்செயலாளர் விருத்தாச்சலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து அவையில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இன்று எம் எல் ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
திமுக கூட்டணியில் முரண்பாடுகளா?
தமிழகத்தில் இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுள்ளது. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் பின், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்யும் போது, இது போன்று கூட்டணி கட்சி தலைவர்கள் அவையில் தொடர்ந்து பங்கேற்பது, திமுக கூட்டணியில் முரன்பாடுகள் உள்ளதாகவும். இதனால் இனி வரும் தேர்தகளில் அதன் எதிரொலி இருக்ககூடுமெனவும் சொல்லப்படுகிறது.
தமீமுன் அன்சாரி கவன ஈர்ப்பு தீர்மானம்
பின்னர் அவை தொடங்கி நடைபெற்ற நிலையில் எம்.எல்.ஏ தமிமூன் அன்சாரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், ‘2013 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு அரசுடமை ஆக்கியது. அதனைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறித்து விவாதிக்க வேண்டுமென தெரிவித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அளித்த விளக்கத்தின் படி சில கோரிக்கைகளை முன் வைத்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சருக்கு 5 கோரிக்கைகள்
கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு வழங்கப்படாத ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பணப் பயன்களை வழங்கிட வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆசிரியர் ஊழியர்களுக்கான பதவி உயர்வுகள் மற்றும் 7வது ஊதியக்குழுவின் பணப் பயன்களை வழங்கிட வேண்டும். . தொகுப்பு ஊதியர் மற்றும் தினக்கூலிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர பட்டப்படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே படித்து முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படாமல் உள்ளதால் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்தார்.தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து ஊழியர்களுடன் கலந்துரையாட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக நேற்று முதல்வரின் உரைக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி வெளிநடப்பு செய்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ தமிமூன், நேற்று முதல்வர் அனுமதித்த பின் திமுகவினர் பேச முதலில் அனுமதி அளித்து சபாநாயகர் பின், பேச அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். அந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் வெளியேறினர் என விளக்கமளித்தார்.
Source link
