கெனிஷா குறித்த அறிவிப்பு: நடிகராக இருந்து சினிமா ரசிகர்களை என்டர்டெயின் செய்த ரவி மோகன் தற்போது இயக்குநராக மகிழ்விக்கவிருக்கிறார். An Ordinary Man அதாவது சாதாரண ஆள் என தன் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். என்னங்க ரவி இது, படத்திற்கு நல்ல தமிழ் பெயராக வைக்காமல் An Ordinary Man என வைத்திருக்கிறீர்களே என ரசிகர்கள் கேட்கிறார்கள்.
யோகி பாபு ஹீரோவாக நடிக்க ரவி மோகன் இயக்கி, தயாரிக்கும் அந்த படத்தின் இசையமைப்பாளர் தெரபிஸ்ட் கெனிஷா பிரான்சிஸாமே என சினிமா ரசிகர்கள் பேசி வந்தார்கள்.இந்நிலையில் அது வதந்தி இல்லை உண்மை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மக்களே உங்களின் ஆசியுடன் நான் இசையமைப்பாளராக என் புது பயணத்தை துவங்குகிறேன் என்று சமூக வலைதளத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் கெனிஷா பிரான்சிஸ். இந்த கெனிஷாவுக்கு என்ன தெரியும் என அவரை போய் இசையமைப்பாளராக்கியிருக்கிறார் ரவி மோகன். என்னமோ போங்க என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.
சம்மதிக்க காரணம்: இந்நிலையில் ரவி மோகன் படம் குறித்து இன்று கெனிஷா கூறியிருப்பதாவது, An Ordinary Man படத்திற்கு இசையமைக்க முதலில் நான் விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால் அதன் ஸ்க்ரிப்ட் பயங்கரமாக இருந்தது. அதனால் ரவி மோகனுக்கு சிறந்த இசையமைப்பாளரை கொடுப்பது மிகவும் முக்கியமானது. ஒரு படத்திற்கு அதுவும் அதிபுத்திசாலியான ரவி மோகன் இயக்கும் படத்திற்கு இசையமைப்பது பெரிய பொறுப்பு. முதலில் 3 பாடல்கள் கொடுத்தேன். அது அனைவருக்கும் பிடித்துப் போகவே என்னை இசையமைப்பாளராக்கினார்கள் என்றார்.
கெனிஷாவுக்கு நெருக்கமானவர்கள் அவரை வாழ்த்திக் கொண்டிருக்க தமிழ் சினிமா ரசிகர்களோ விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கிடையே சிலரோ ரவி மோகன் மனம் அறிந்து அவர் கேட்கும்படியான இசையை கொடுப்பார் கெனிஷா. ரவிக்கு கெனிஷாவை பிடித்திருக்கிறது. கெனிஷாவுக்கு ரவியை பிடித்திருக்கிறது. மேலும் பணம் போட்டு அந்த படத்தை தயாரிப்பது ரவி. அதனால் யாரை இசையமைப்பாளராக்குவது என்பது அவர் விருப்பம். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்கிறார்கள்.
ரவிக்கு பாராட்டு: ஒரு வித்தியாசமான கூட்டணியில் உருவாகி வரும் An Ordinary Man படம் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டும் அல்ல ரவி இதுவரை படமாக்கிய காட்சிகளை பார்த்த மோகன்ராஜா மற்றும் பெற்றோருக்கு அது பிடித்துவிட்டது.
சொந்த தம்பி, பெத்த பிள்ளை என்பதால் ரவி மோகன் இயக்கிய காட்சிகள் அருமை என சொல்லியிருப்பார்கள் என நினைக்க வேண்டாம். அப்பா எடிட்டர் மோகனும் சரி, அண்ணனும் சரி ரவி விஷயத்தில் அவர் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக பொய் சொல்ல மாட்டார்கள். மனதில் பட்டதை தான் சொல்வார்கள். அது ரவிக்கும் தெரியும். அதனால் தான் அவர்கள் பாராட்டியதும் அப்படி ஹேப்பியாக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டார்.
கெனிஷா ஸ்டோரி அர்த்தம்: இதற்கிடையே தன்னை மதிக்காத யாரும் நன்றாக வாழ்ந்தது கிடையாது என கெனிஷா பிரான்சிஸ் ஒரு ஸ்டோரியை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட அவர் யாரை குத்திக் காட்டுகிறார் என்பதை கண்டுபிடித்துவிட்டோமே என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஹீலிங், தெரபி தேவை என்று தான் கெனிஷாவை தேடிச் சென்றார் ரவி மோகன். இந்நிலையில் ஹீல் பண்ணுகிறேன் என யாராவது வந்தால் ஹை ஹீல்ஸால் சாத்தி அனுப்பவும் என ஆர்த்தி ஒரு ஸ்டோரி போட அது கண்டிப்பாக ரவி மோகனின் தெரபிஸ்ட்டுக்கு தான் என பேசப்பட்டது.
Source link
