mistakes to avoid on pradosh பிரதோஷம் அன்று இந்த 5 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

பிரதோஷம் விரதம் என்பது சிவபெருமானின் அருளை பெறுவதற்கான மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் தங்களின் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், பாவங்கள், கர்மவினைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, அமைதி, செழிப்பு, ஆரோக்கியம் உள்ளிட்ட நன்மைகளை பெறுவதற்காக சிவ பெருமானை வழிபடும் நாளாகும். அதனால் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் பிரதோஷங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய்கிழமையில் வரும் பிரதோஷ விரதத்தை, பெளம பிரதோஷம் என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தெரியாமல் செய்யும் சில விஷயங்கள் நம்முடைய பாவங்களை குறைப்பதற்கு பதிலாக, பல மடங்கு அதிகரிக்க செய்து விடும்.

பிரதோஷம் அன்று செய்யக் கூடாத 5 தவறுகள் :

1. தவறான நேரத்தில் பூஜை – காலை பூஜை செய்வது எவ்வளவு முக்கியமோ அதே போல், மாலையில் பிரதோஷ வேளையில் சிவ பூஜை செய்வது முக்கியமானது. பிரதோஷ நேரத்தை தவற விட்டு, மற்ற நேரத்தில் பூஜை செய்வது விரதத்தின் பலனை குறைத்து விடும் என்று சொல்லப்படுகிறது. பிரதோஷம் கடைபிடிக்கும் பக்தர்கள் உரிய நேரத்தில் சிவ பூஜை செய்து, பிரதோஷ காலம் நிறைவடைந்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

2. அசைவ உணவுகள் சாப்பிடுதல் – பிரதோஷ நாளில் ஆன்மீக தூய்மையை கடைபிடிக்க வேண்டும். இந்த நாளில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மதுபானம், அசைவ உணவுகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சாத்வீக உணவுகளை மட்டுமே இந்த நாளில் சாப்பிடுவதால் மனதின் கவனத்தை ஒரு முகப்படுத்தி, வழிபாடு செய்ய உதவும் என சொல்லப்படுகிறது.

3. சிவனுக்கு தவறான பொருட்களை அர்ப்பணித்தல் – பிரதோஷம் வழிபாட்டின் போது சிவபெருமானுக்கு துளசி, உடைந்த அரிசி, மஞ்சள் உள்ளிட்ட தவறான பொருட்களை ஒரு போதும் அர்ப்பணிக்கக் கூடாது. இது சிவ பெருமானின் கோபத்திற்கு ஆளாக்கி விடும்.

4. கோபம் மற்றும் வாக்குவாதங்கள் – பிரதோஷ நாள் அன்று எந்த விதமான வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளில் ஈடுபடக் கூடாது. இது வழிபாட்டின் புனிதம் மற்றும் விரதத்தின் பலனை குறைக்கும். அதற்கு பதிலாக பக்தர்கள் இந்த நாளில் அமைதியாகவும், நேர்மறையான சிந்தனைகளுடனும், இறை சிந்தனையுடனும் இருக்க வேண்டும்.

5. வீட்டை அசுத்தமாக வைத்தல் – பிரதோஷ வழிபாடு செய்வதற்கு முன் வீட்டில் பூஜை செய்யும் இடம் அல்லது கோவிலில் நாம் இருக்கும் இடம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அசுத்தமான இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்பதால் பூஜைக்கான இடத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

பிரதோஷம் அன்று செய்ய வேண்டியது :

1. சிவபெருமானையும், பார்வதி தேவியையும் சேர்த்து வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வ இலை, சுத்தமான கங்கை நீர், மலர்கள் ஆகியவற்றை அர்ப்பணித்து வழிபட வேண்டும்.

2. பிரதோஷ காலம் மட்டுமின்றி நாள் முழவதம் சிவ மந்திரங்களை உச்சரித்தபடி இருப்பது சிறந்த பலனை தரும்.

3. பிரதோஷ வேளையில் கோவிலுக்கு சென்று சிவ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்து, சோமசூக்த முறையில் கோவிலை வலம் வர வேண்டும்.

4. மனத்தூய்மை மற்றும் உடல் தூய்மையுடன் சிவ பெருமானையும், நந்தி தேவரையும் வழிபட வேண்டும்.

Source link