இந்திய அளவில் அதிக மக்களை ஈர்த்துள்ள ரியாலிட்டி ஷோவாக பிக் பாஸ் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் போது மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்கள் பெருமளவு குறைந்து போய் உள்ளனர். என்னதான் அதிக ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு இருந்தாலும் இதன் மீது மிகக் கடுமையான விமர்சனமும் வந்து கொண்டுதான் உள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் பலரும் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், என்று பலமுறை குரல் எழுப்பி உள்ளனர். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக ரசிகர்கள் ஆதரவுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் உள்ளது.
அதிக பரபரப்பு மிக்க இந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை , தொகுத்து வழங்குவதற்கு பிரபலமான நடிகர்களே நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் சம்பவங்களை விசாரணை செய்து அதன் பரபரப்பை மேலும் அதிகமாக்குகின்றனர். இதற்காக இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கோடிகளில் சம்பளம் தரப்படுகிறது.
