Vijay Political Career Astrology,விஜய்யின் ஆட்சி 2029 வரை நீடிக்குமா? ஜோதிடக் கணிப்பு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்! – will tn cm c joseph vijay’s government continue? what astrology says about his political future

ஜோதிடத்தில் விதிகள், கிரக பார்வை அம்சங்கள், கோச்சாரம் என பல்வேறு விஷயங்கள் ஒருவருக்கான பலன்கள் கணிக்கப்படுகின்றன. சில நல்ல யோக பலன்கள் சாதகமன பலன்களை தரக்கூடியதாகவும், பல நேரங்களில் சூழலை கடினமானதாக, சாதகமற்ற நிலையை தரவும் வாய்ப்புகள் உண்டு. அந்த விதத்தில், நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் ஜாதகம் என்ன சொல்கிறது? அவருடைய ஆட்சி நீடிக்குமா? போன்ற விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணையத்தில் பொதுவாகக் கிடைக்கும் அவரது பிறந்த ஜாதகத் தகவல்களையும், பதவியேற்பு நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஜாதகத்தையும் வைத்து இந்தப் பார்வை முன்வைக்கப்படுகிறது.

சுக்கிரன் வலிமை நிறைந்த விஜயின் ஜாதகம்

தென்னிந்திய அரசியலில் விஜய் தற்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக அரசியலில் அவரது செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
அவரது பிறந்த ஜாதகத்தைப் பார்க்கும்போது, சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பது முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. சுக்கிரன் பொதுவாக வசதி, செல்வம், கவர்ச்சி, புகழ் மற்றும் மக்களைக் கவரும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது.

ஆனால், அவரது பதவியேற்பு ஜாதகத்தை ஆழமாக ஆய்வு செய்யும்போது, 2029 வரை இந்த ஆட்சி நீடிப்பதில் சில முக்கியமான சந்தேகங்கள் இருப்பதாக ஜோதிட ரீதியாகத் தெரிகிறது.

தற்போது விஜய்யிடம் முழுமையான பெரும்பான்மை இருப்பதாகக் கருதப்பட்டாலும், மக்கள் மத்தியில் அவரது புகழ் உச்சத்தில் இருந்தாலும், இந்த நிலை தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஜாதகம் காட்டவில்லை.

நிதி விவகாரம் மிகப்பெரிய சவாலாகுமா?

இந்த ஆட்சியின் எதிர்காலத்தில் நிதி சார்ந்த பிரச்சினைகள் முக்கியமான சவாலாக உருவாகக்கூடும் என்று பதவியேற்பு ஜாதகம் சுட்டிக்காட்டுகிறது.
மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், இலவசத் திட்டங்கள் மற்றும் மக்கள் கவரும் அறிவிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். பொதுமக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு முயற்சி செய்யும். ஆனால், இத்தகைய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும்.

அந்த நிதியை அரசு எவ்வாறு திரட்டும்? என்பதே ஒரு கட்டத்தில் மிகப்பெரிய கேள்வியாக மாறக்கூடும். இதன் தாக்கம் 2027-ம் ஆண்டு நடுப்பகுதிக்குப் பிறகு வெளிப்படத் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிடப் பார்வை கூறுகிறது.

2027 நடுப்பகுதிக்குப் பிறகு மாற்றம்?

2027-ம் ஆண்டு நடுப்பகுதியைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் புகழ் மற்றும் மக்கள் ஆதரவு படிப்படியாகக் குறையத் தொடங்கும் சூழல் உருவாகலாம். அவருக்கு எதிரான விமர்சனங்களும் அதிகரிக்கலாம். அதுமட்டுமல்லாமல், கட்சிக்குள்ளேயே சில தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் உருவாகும் வாய்ப்பும் இருக்கலாம்.

இன்று ஆதரவாக இருப்பவர்கள் அனைவரும் தொடர்ந்து அதே நிலையில் இருப்பார்கள் என்று கூற முடியாது. மேலும், அரசின் நீண்டகாலக் கொள்கைகள் மற்றும் அதிகார மையங்களின் முடிவுகள் காரணமாகவும் சில சிக்கல்கள் உருவாகலாம்.

2028 மிகவும் சவாலான ஆண்டாக இருக்குமா?

ஜோதிடக் கணிப்பின்படி 2028-ம் ஆண்டு விஜய் தலைமையிலான அரசுக்கு மிகவும் சவாலான காலகட்டமாக இருக்கலாம். அந்த ஆண்டில் அரசியல் எதிர்ப்புகள், சர்ச்சைகள் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பதவியேற்பு ஜாதகம் சுட்டிக்காட்டுகிறது.

இதே காரணத்தினால்தான் 2029 வரை இந்த ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஒருவேளை இந்த ஆட்சி 2029 வரை வெற்றிகரமாக நீடித்துவிட்டால், அதன் பின்னர் 2031 வரை பெரிய அளவிலான ஆபத்து இருக்காது என்று இந்த ஜாதக அமைப்பு காட்டுவதாகக் கருதலாம்.

விஜய்யின் அரசியல் பயணம் நீண்டதாக இருக்குமா?

விஜய்யின் தனிப்பட்ட பிறந்த ஜாதகத்தை மட்டும் பார்க்கும்போது, அவர் நீண்ட காலம் அரசியலில் பயணிக்கக்கூடியவர் என்ற தோற்றமே கிடைக்கிறது.
அதாவது, அரசியலில் விஜய்யின் பயணம் குறுகிய காலத்திற்குள் முடிவடையும் என்று இந்த ஜாதகம் கூறவில்லை. மாறாக, அவர் நீண்ட காலம் அரசியல் களத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே இந்த ஜாதகப் பார்வை தெரிவிக்கிறது.

ஆனால், ஒரு அரசாங்கம் முழுமையாக ஐந்து ஆண்டுகள் நீடிப்பது என்பது வேறு விஷயம். அதில்தான் அவரது பதவியேற்பு ஜாதகம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வரும் ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகலாம். வெளிப்படையாகத் தெரியும் விஷயங்களுக்குப் பின்னால் வேறு அரசியல் கணக்குகள் இருக்கலாம்.
மேலும், மக்கள் மத்தியில் ஆதரவைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு மக்கள் கவரும் நலத்திட்டங்களும் அறிவிக்கப்படலாம். அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முயற்சிகளும் அதிகரிக்கலாம்.

2031 வரை தடையின்றி ஆட்சி நடக்குமா?

முடிவாக…
விஜய்யின் தனிப்பட்ட ஜாதகம் நீண்ட அரசியல் வாழ்க்கைக்கான வாய்ப்பைக் காட்டினாலும், பதவியேற்பு ஜாதகம் அவரது ஆட்சியின் நிலைத்தன்மை குறித்து சில கேள்விகளை எழுப்புகிறது.
குறிப்பாக 2027-ம் ஆண்டு நடுப்பகுதிக்குப் பிறகு அரசியல் சவால்கள் அதிகரிக்கவும், 2028 மிகவும் கடினமான ஆண்டாக அமையவும் வாய்ப்புள்ளதாக இந்த ஜோதிட ஆய்வு தெரிவிக்கிறது.

2029 வரை ஆட்சி நீடித்தால் 2031 வரை பெரிய தடையின்றி பயணிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் 2029-க்கு முன்பாகவே ஆட்சியில் பெரிய சிக்கல் ஏற்பட்டால், நிலைமை மிகவும் கடினமாக மாறக்கூடும் என்பதே இந்த ஜாதக ஆய்வின் முக்கியக் கணிப்பு.
குறிப்பு: இது ஜோதிட அடிப்படையிலான ஒரு பார்வை மற்றும் கணிப்பு மட்டுமே. அரசியல் முடிவுகள் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக காரணிகளையும் சார்ந்தவை.

Source link