உடல் மொழியால் கேலி, தெறிக்கும் பஞ்ச் வசனங்கள்: முதலமைச்சர் விஜய்யை தொடரும் சர்ச்சை – criticism against tamil nadu cm vijay for punch dialogue speech and misa controversy

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் திமுகவினர் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

அப்போது தவெக கவர்ச்சியில் வெற்றி பெற்றுவிட்டது என எதிர்க்கட்சியினர் வைத்த விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றிய முதல்வர் விஜய், ’கவர்ச்சியில் வெற்றிப் பெற நாங்கள் என்ன என கேட்டு பின் அதை விடுங்க’’ என பேசினார். அப்போது இந்த பேச்சு சர்ச்சையானது.

சட்டசபையில் குட்டி ஸ்டோரியும், ஆக்‌ஷனும்

தொடர்ந்து ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்ற அவையில் பங்கேற்ற முதல்வர் ஜோசப் விஜய், ஒரு குட்டிக் கதை கூறி, எங்க உங்க அப்பாவ காணோம் என திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தோல்வியை கிண்டலடிக்கும் வகையில் பேசி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக உறுப்பினர்களை சீண்டினார். மேலும் அன்று சபாநாயகரிடம் ஒப்புதல் பெற்று, தேர்தலுக்கு முன்னதாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பின், முன்னாள் முதல்வர் ஸ்டானின் செய்த செய்கையை, சட்டமன்றத்தில் சினிமா பட பாணியில் உடல் மொழியில் செய்கை காட்டினார்.

இந்த செயல்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மேலும் தவெகவின் கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக அரசிற்கு ஆதரவளித்த சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சி தலைவர்கள், முதல்வர் ஜோசப் விஜயின் இது போன்ற செயல்கள் ஏற்புடையதல்ல என கருத்து தெரிவித்தனர்.

விசில் புரட்சி செய்து சாதனை படைத்துள்ளார் CM விஜய்! சபாநாயகர் பேச்சு

கரூர் சம்பவம்- என்ன டேஷ்க்கு என பேசிய முதல்வர் விஜய்

கடந்த ஆண்டு தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்காக கரூர் சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தவெக அரசு அமைந்த உடன் ஜூலை மாதம் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்க முதல்வர் விஜய் கரூர் சென்றார்.

அப்போது கரூர் மக்கள் மத்தியில் பேசிய விஜய், அன்றும் திமுகவினர் மற்றும் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் கரூர் துயர சம்பவம் அன்று காவல்துறை முறையாக செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசி முதல்வர் விஜய், வாயில் நல்லா வந்துடும். நான் என்ன டேஷ்க்கு என பேசினார். இது மக்கள் மற்றும் அரசியல் வட்டத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.

தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய், தரம் தாழ்ந்து, இது போன்ற சொற்களை மக்கள் மத்தியில் பயன்படுத்துவது சரியில்லை என பலரும் விமர்சித்தனர். மேலும் தற்போதைய 2கே கிட்ஸ் மற்றும் ஜென்சி கிட்ஸ் அதிகம் தவெகவிற்கு ஆதரவளிக்கும் நிலையில், அவர்களை அரசியல்மயப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் முதல்வருக்கு இப்படியான செயல்கள் நல்லதல்ல என அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

முதல்வர் விஜயின் பேச்சுக்கு மக்களின் ரியாக்‌ஷன்

முதல்வர் விஜய்யின் இது போன்ற பேச்சுகளுக்கு எதிர்ப்புகள், எதிர்வினைகளும் வரும் அதே சமயத்தில், மக்கள் ஆதரவும் தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் அதிகம் களமாடும் தவெகவினர் முதல்வரின் இது போன்ற பேச்சுக்களை வீடியோவில் இருந்து வெட்டி, பரப்பி வருகின்றனர். இதனை சாமானிய மக்கள் பலரும் ரசிப்பதாகவும், இதுபோன்று எளிய சொற்களும் பேச்சுகளும் எளிதில் தங்களை கவர்வதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மிசா குறித்து முதல்வர் விஜய் சைகை- வெடித்த சர்ச்சைகள்

முதல்வர் ஜோசப் விஜய் நேற்று பதிலுரையின் போது ‘நான் சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவேன் என்று வசம் பேசி, உடல் மொழியால் செய்கை கான்பித்தார். தொடர்ந்து மிசா குறித்தும், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மிசாவில் கைது ஆனது குறித்தும் பேசினார். அப்போது அவர் தனது தாடையில் கை வைத்து காண்பித்த சைகை சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இது முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் மிசாவில் கைது ஆன அனைவரையும் அவமதிக்கும் ஒன்றாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. தொடர்ந்து முதல்வரின் இந்த பேச்சுக்களை நேற்று தவெக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் கைதட்டி உற்சாகமாக ரசித்தனர்.

மிசா குறித்து அமைச்சர்கள் அறிய வேண்டும்- சிபிஐ சண்முகம்

இந்நிலையில் இன்று சென்னை தியாகராஜ நகரில் செய்தியாளர்களை சிபிஐ மாநில பொதுச் செயலாளர் சண்முகம் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மிசாவில் ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றுள்ளனர். அதில் கம்யூனிஸ்டுகளும் மிசாவில் சிறைக்கு சென்று பல கொடுமைகளை சந்தித்துள்ளனர். எனவே தவெக அமைச்சர்கள் மிசா குறித்தும் அதன் வரலாறு குறித்தும் அறிய வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார்.

கவனம் பெற்ற மருது அழகுராஜ் பதிவு

மேலும் திமுக செய்தி தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ், முதல்வர் விஜய் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து நேற்று வரை அவரது கேலி, கிண்டல் பேச்சுக்களையும் உடம் மொழியால் செய்கை காண்பித்த நிகழ்வுகளையும் தொகுத்து சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஒரு முதலமைச்சர் பொறுப்பை, முச்சந்தி சண்டியர் ரேஞ்சுக்கு கீழே தள்ளிருப்பதன் மூலம் ‘இவருக்கா ஓட்டுப்போட்டோம் என மக்களை வெட்கி தலைகுனிய வைத்து கொண்டிருக்கிறார் என பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Source link