சட்டப்பேரவையின் மாண்பு குறித்த கேள்வி : சட்டென பதிலளித்த மு.க. ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் (08.09.2026) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இதற்கிடையே இன்று அவை கூடியதும் எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, சட்ட ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய்யின் பதிலுரை குறித்து விமர்சனம் செய்தார். அதோடு சர்க்காரியா கமிஷன் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், மிசா குறித்து பேசும் போது முரசொலி மாறனின் பெயர் குறிப்பிட்டு பேசியது அவை மீறிய செயல் என்றும் குறிப்பிட்ட எ.வ.வேலு, காவல்துறை தவிர முதல்வர் விஜய் ஆதாரமில்லாமல் பேசிதும், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிற அத்தனை குறிப்புகளும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதையடுத்து அமைச்சர்கள் சி.டி.ஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சர்க்காரியா அறிக்கையில் இருப்பது பற்றி தான் முதல்வர் விஜய் பேசினார், அதனால் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கக் கூடாது என்று கூறினர். மேலும், திமுகவையும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார்கள். இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அதோடு முதல்வர் விஜய் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினர்.

அப்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், நேற்று (07.09.2026) முதல்வர் விஜய் பேசியதில் எதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். இதனை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரைக் கண்டித்து அவரின் இருக்கையை முற்றுகையிட்டனர். மேலும் அவையின் கீழே அமர்ந்து தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களை அழைத்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார். இதனயடுத்து பேரவைக்குள் நுழைந்த அவை காவலர்கள், திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

கோப்புப்படம்

இந்நிலையில் இது தொடர்பாக திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “தற்போது சட்டப்பேரவை மாண்போடுதான் நடக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மு.க.ஸ்டாலின், “நீங்களே அந்த கேள்வியைக் கேட்கக்கூடிய அளவுக்குத்தான் தற்போது பேரவை நடந்து கொண்டிருக்கிறது” என மிகவும் காட்டமாக பதிலளித்தார். 

Source link