ஜெர்மனி அரசியலில் திருப்பம்.. மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி

Summary

ஜெர்மனியில் நடைபெற்ற மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றி அந்நாட்டு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல்லாத அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனியின் கிழக்கே உள்ள சாக்சனி அன்ஹால்ட் மாகாண சட்டமன்றத் தேர்தலில், ஆளும்கட்சியான அதிபர் பிரீட்ரிக் மெர்சின் ‘கிறிஸ்டியன் டெமோக்ராடிக் யூனியன்’ (CDU) கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

தீவிர வலதுசாரி வெற்றி

ஆல்டர்னேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ (AfD) என்ற தீவிர வலதுசாரி கட்சி அங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது.

AfD கட்சி 43.8% வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 83 தொகுதிகளில் 39 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2021 தேர்தலோடு ஒப்பிடுகையில் அக்கட்சிக்கு இரட்டிப்பு வாக்குகள் கிடைத்துள்ளது.

அதிபர் மெர்ஸின் CDU கட்சி வெறும் 17.2% வாக்குகளை மட்டுமே பெற்று, 15 இடங்களை மட்டும் வென்றுள்ளது.

2002 முதல் இந்த மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த CDU கட்சிக்கு இது வரலாற்றிலேயே மிகக் குறைந்த வாக்குச் சதவீதமாகும்.

பெரும்பான்மை இல்லை

பெரும்பான்மைக்கு 42 இடங்கள் தேவை என்ற நிலையில், AfD கட்சிக்கு இன்னும் 3 இடங்கள் குறைவாக உள்ளன.

பிற பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் AfD உடன் கூட்டணி வைக்க முன்வராததால் அங்கு ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நிலவுகிறது.

அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் முடிவு CDU கட்சியின் அடித்தளத்தையே ஆட்டிப்பார்த்துள்ளதாகவும், இது தமக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

Source link