தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதுவதில் இரு பெரும் துருவங்களாக இருந்த கண்ணதாசன் – வாலி இருவரும் தொழில் ரீதியான போட்டியில் இருந்திருந்தாலும், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. ஒருமுறை கண்ணதாசன் எழுதிய பாடலையே வாலி குறை சொன்னதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் மன்மத லீலை. கமல்ஹாசன், ஆலம், ஹேமா சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் ப்ளேபாய் வேடத்தில் நடித்திருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பார். தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகம் இருக்கும் நாயகன் மனைவி இருந்தாலும், தான் பார்க்கும் பெண்கள் அனைவரையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
அந்த வகையில் ஒரு பெண்ணுடன் கமல்ஹாசன் பழகுகிறார். அவரிடம் அன்பாக பேசும்போது அவர் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவருக்கு, கணவன், குடிகாரனமாக அமைந்து விட்டதாக சொல்கிறார். இவரை அடைய வேண்டும் என்று நினைக்கும் கமல்ஹாசன், அதற்காக அவருடன் நெருங்கி பழகுகிறார். அப்போது அவர் எனக்கு இன்னொரு கணவன் இருக்கிறார். அவர் இந்த ரேடியோதான் என்று சொல்கிறார். ரோடியோ என்ன கம்பெனி என்று கமல்ஹாசன் கேட்க அவர் பிலிப்ஸ் என்று சொல்கிறார்.
அதை கேட்ட கமல்ஹாசன், அப்போ நீங்க மிஸஸ் பிலிப்ஸ் என்று சொல்கிறார். அதன்பிறகு தான் ‘’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”, என்ற பாடல் ஒலிக்கும். இந்த ரேடியாவில் பாடல் ஒளிப்பது போலவும், அந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் பெயர்கள் சொல்லும் போது கடைசியாக சாந்தோம் விஸ்வநாதன் என்று எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயர் வரும். அதன்பிறகு அந்த பெண்ணின் கணவன் குடித்துவிட்டு இருப்பதும், அவரை கமல்ஹாசனும் அந்த பெண்ணும் அழைத்து வந்து படுக்க வைக்கும் காட்சிகள் வரும்.
இந்த பாடல் முழுவதுமே கமல்ஹாசன் அந்த பெண்னை அடைவதற்காக எப்படி அவரிடம் பேசுகிறார் என்பதையே பாடல் வரிகளாக வைத்திருப்பார்.
கண்ணதாசன். கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இந்த படத்தில் மனைவி அழகாக அமைந்திருந்தாலும், அவருக்கு ஏற்ற கணவன் தான் அமையவில்லை. அதனால் அடுத்தவன் அந்த பெண்ணை அடைய நினைக்கும்போது ஆசை வார்த்தைகள் கூறுவான். இதனால் கணவன் அமைவதெல்லாம் என்று தானே எழுத வேண்டும். என்னண்ணே இப்படி தவறா எழுதிட்டீங்களே என்று வாலி கேட்டுள்ளார். இது குறித்து பேசிய வாலி, நான் இப்படி கேட்டதற்கு கண்ணதாசன் சொன்ன பதிலை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதை இயக்குனர்கள் தான் இதை மாற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
