தொடர் வெற்றிகள்; ராசியான இளம் நடிகை

நடிகர் ரிஷிகாந்த்,  நடிகை அனிஷ்மா அனில் குமார் நடிப்பில் உருவான படம் ‘மொத ராத்திரி’. ‌இப்படம் கடந்த ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வெளியானது. 

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், உற்சாகமடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்தனர்.  

இந்நிலையில் நடிகை அனிஷ்மா, தமிழில் நான் நடித்த அனைத்து படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. மலையாளத்தைப் போலவே தமிழிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  

மலையாள சினிமாவில் நடித்துவந்த அனிஷ்மா ’சிறை’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து, அவர் கென் கருணாஸின் ’யூத்’ படத்தில் நடித்திருந்திருந்தார். இந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இவரது நடிப்பில் வெளியான ’மொத ராத்திரி’ படமும் வெற்றிபெற்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜியின் தயாரிப்பில் உருவாகி வரும் “மாகாளி” படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகையாக அனிஷ்மா உருவெடுத்துள்ளார். தொடர்ந்து இவர் நடித்து வரும் படங்கள் வெற்றி பெரும் சூழலில், இவர் ராசியான நடிகையாகப் பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

Source link