14,399 கேள்விகள்.. யார் எவ்வளவு நேரம் பேசினார்கள்? சட்டப்பேரவையின் முழு ரிப்போர்ட் வெளியானது – tamil nadu assembly session 28 days full report questions bills announcements

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவாக, அவையின் செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

அவை நேரமும் விவாதங்களும்

மொத்தம் 28 நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில், அவை 170 மணி நேரம் இயங்கியுள்ளது. இதில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மட்டும் 15 நாட்கள் நடைபெற்றது.

உதயநிதி எழுப்பிய கேள்வி…சபாநாயகர் சொன்ன பதில்!

அவையில் மொத்தம் 165 உறுப்பினர்கள் உரையாற்றினர். உறுப்பினர்களின் மொத்த விவாத நேரம் 63.58 மணி நேரமாகப் பதிவாகியுள்ளது.

கட்சி வாரியாகப் பேசிய நேரம்

சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எடுத்துக்கொண்ட நேரத்தின் விவரம்:

ஆளும்கட்சியான தவெகவை சேர்ந்த 51 உறுப்பினர்கள் — 13.28 மணி நேரம் பேசியுள்ளனர்.

திமுகவை சேர்ந்த 38 உறுப்பினர்கள் — 23.35 மணி நேரம் நேரம் பேசியுள்ளனர்.

அதிமுகவை சேர்ந்த 37 உறுப்பினர்கள் — 12.58 மணி நேரம் நேரம் பேசியுள்ளனர்.

காங்கிரஸ், ஐயுஎமெல் , பாமக உள்ளிட்ட கட்சிகள் 39 உறுப்பினர்கள் — 13.52 மணி நேரம் நேரம் பேசியுள்ளனர்.

வினாக்கள் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்

சட்டமன்றத்தில் மொத்தம் 170 உறுப்பினர்கள் 14,399 கேள்விகளைக் கோரியிருந்தனர்.

நட்சத்திரக் குறியிட்ட முக்கியமான வினாக்கள்: 3,455 கேட்கப்பட்டது.

அதில் பதிலளிக்கப்பட்ட வினாக்கள்: 0 முதல் 23 வரை

இணை வினாக்கள் (Supplementary Questions): 242

மேலும், சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் (Special Attention Motions) 45-ம், அவைக் குறிப்புகள் (Mentions) 59-ம், தகவல் கோரும் கோரிக்கைகள் (Information Requests) 59-ம் எழுப்பப்பட்டன.

மசோதாக்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்

இக்கூட்டத்தொடரில் மொத்தம் 13 சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசால் 8 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அமைச்சரவை மற்றும் முதலமைச்சரின் விதிகளின் கீழ் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:

விதி 110-ன் கீழ் அறிக்கைகள்: 18 வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தனிப்பட்ட அறிவிப்புகள்: 17 ஆகும்

Source link