கம்யூ., – தவெக இடையே குழப்பம் எதுவும் இல்லை: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

சென்னை:”கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகிறோம்,” என, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம், சென்னை பனையூரில் நாளை (செப்.9) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க வருமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொயிதீனை, சென்னை -மண்ணடியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில், அமைச்சர் நிர்மல்குமார் சந்தித்து, அழைப்பு விடுத்தார்.

பின், பேட்டியளித்த நிர்மல் குமார், “கம்யூனிஸ்ட் கட்சிகள், அவர்களின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர். பொதுவான கோரிக்கைகளை சொல்வதாக கூறுகின்றனர். இக்கட்டான சூழலில், கம்யூ., கட்சிகள் எங்களுடன் நின்றன.

அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். அனைத்தும், நல்லபடியாக முடியும். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. கூட்டணிக்கு பெயர் வைப்பது மற்றும் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து, ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்,” என தெரிவித்தார்.

Source link