மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை அவதுாறாக பேசி யதாக தொடரப்பட்ட வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட் சித் தலைவர் ராகுல் தாக்கல் செய்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜஸ்தானில், 2018 நடந்த காங்., பொதுக்கூட் டத்தில் பேசிய ராகுல், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக குற்றஞ் சாட்டினார். தொடர்ந்து, பிரதமர் மோடியை, ‘திரு டர்களின் தலைவர்’ என்றும் விமர்சித்தார். இது தொடர்பாக, மஹாராஷ்டிராவின் கிர்காம் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில், பா.ஜ., பிரமுகர் ஸ்ரீஷ்ரிமால் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.விசாரித்த நீதிமன்றம், விளக்கம் கேட்டு ராகுலுக்கு, 2019ல் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, தனி நீதிபதி என்.ஆர்.போர்கர் விசாரித்து வந்தார்.
இந்த வழக்கை மீண்டும் விசாரித்த தனி நீதிபதி என்.ஆர்.போர்கர், ‘மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தவித குறைபாடும் இல்லை. அதில் தலையிட முடியாது. எனவே, ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என, உத்தரவிட்டார்.
அதே சமயம், உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, இந்த புகார் மீதான விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத் திவைக்கும்படி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அவர் உத்தரவிட்டார்.
