எதிர்பார்த்த படம் படுதோல்வி; இனிமேல் இவருடன் நடிக்க முடியாது என தோன்றியது: பிரபல நடிகர் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி கருத்து

‘கிங் ஆஃப் கோத்தா’ திரைப்படத்தின் தோல்வி தனது திரையுலக வாழ்க்கையை வெகுவாக பாதித்ததாக கூறியுள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இனிமேல் துல்கர் சல்மானுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று முடிவு செய்திருந்ததாக கூறியுள்ளார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

மலையாள சினிமாவில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிங் ஆஃப் கோத்தா’. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் துல்கர் சல்மான் நடிப்பில் கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படமாக இருந்தது. இதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்திற்கு முன்னதாக 2021-ம் ஆண்டு துல்கர் நடிப்பில் வெளியான குருப் படம் தான் திரையரங்கில் வெளியாகி இருந்தது. 

இயக்குநர் அபிலாஷ் ஜோஷியின் இயக்கத்தில் உருவான ‘கிங் ஆஃப் கோத்தா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்தது. திரைப்படம் தோல்வியடைந்ததுடன், அதன் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரும் சமூக வலைதளங்களில் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார்கள். குறிப்பாக, படத்தின் நாயகன் துல்கர் சல்மான் மற்றும் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டனர்.

இது குறித்து சமீபத்தில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, ‘கிங் ஆஃப் கோத்தா’ திரைப்படத்தின் தோல்வி தன்னை வெகுவாக பாதித்ததாகவும், அதன் காரணமாக மலையாளத் திரையுலகில் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு, தன்னைப் படங்களில் நடிக்க வைக்க திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டத் தொடங்கியதாகவும் அவர் கூறினார். மேலும், ட்ரோலிங் மிகப்பெரிய அளவில் சென்றதால், மீண்டும் துல்கர் சல்மானுடன் இணைந்து பணியாற்றும் நம்பிக்கையையே தான் இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க வேண்டியிருந்த ஒரு விளம்பரப் படத்தில்கூட, ஐஸ்வர்யா லட்சுமி ஒருமுறை நடிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார். மீண்டும் தங்களது கூட்டணியை வைத்து மக்கள் கேலி செய்தால், அது அந்த நிறுவனத்தின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர் நினைத்ததே இதற்குக் காரணம். 2023ஆம் ஆண்டு ‘கிங் ஆஃப் கோத்தா’ மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், அதற்குப் பிறகு மலையாளத் திரையுலகில் என்னை படங்களில் நடிக்க வைக்கவே அனைவரும் தயங்குவது போல் எனக்குத் தோன்றியது.

என்னை மட்டுமல்ல, துல்கர் மற்றும் படக்குழுவினரும் ட்ரோலிங்கை எதிர்கொண்டனர். எனது நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்தும் கேலி செய்யப்பட்டன. ஆனால், பல நேரங்களில் அவர்கள் கூறியது சரிதான் என்றும் எனக்குத் தோன்றியுள்ளது என்று கூறியுள்ளார். ‘திரைப்படத்தில் துல்கர் சல்மானை ‘ராஜுவேட்டா’ என்று அழைத்த விதத்திற்காக பலரும் தன்னை கேலி செய்ததாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். “படத்தில் நான் துல்கரை ‘ராஜுவேட்டா’ என்று அழைத்த விதத்தை வைத்து பலரும் என்னைக் கேலி செய்தனர்.

2024ஆம் ஆண்டு ‘ஹலோ மம்மி’ படத்தின் படப்பிடிப்பின்போது, உதவி இயக்குநர் ஒருவர் என்னை ‘ராஜுவேட்டா’ என்று அழைத்து கேலி செய்தது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இதுபோல் பல விஷயங்கள் நடந்தன” என்று அவர் கூறினார். அதற்குப் பிறகு துல்கருடன் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், நான் அந்தக் குழுவினரிடம், ‘இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருந்துள்ளன. இது உங்களுக்கும் பிரச்சினையாகிவிடும்’ என்று கூறினேன். இனிமேல் என்னால் துல்கருடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த அளவுக்கு இந்த ட்ரோலிங் என்னை பாதித்துவிட்டது.

ஷபீர் கல்லாரக்கல், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா மற்றும் செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்த ‘கிங் ஆஃப் கோத்தா’ திரைப்படம், பிரபல மலையாள இயக்குநர் ஜோஷியின் மகனான அபிலாஷ் ஜோஷி இயக்குநராக அறிமுகமான திரைப்படமாகும். சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம், உலகளவில் வெறும் ரூ.31.35 கோடி மட்டுமே வசூலித்ததாக தொழில்துறை வசூல் தரவுகளை வெளியிடும் சாக்னில்க் தெரிவித்துள்ளது.

Source link