கடந்த ஓராண்டில் 2 லட்சம் புதிய நிறுவனங்கள் தொடக்கம்

புதுடில்லி: இந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஓராண்டில் 2 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த 2025 ஜூன் முதல், 12 மாதங்களில், நம் நாட்டில் செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களின் பட்டியலில், 2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் இணைந்துள்ளன. கடந்த 2025 ஜூனில் 19.20 லட்சமாக இருந்த நிறுவனங் களின் எண்ணிக்கை, 2026 ஜூனில் 21.30 லட்சமாக உயர்ந்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில், 11 சதவீத வளர்ச்சி. கடந்த 10 ஆண்டுகளில், ஒரே ஆண்டில் ஏற்பட்ட அதிகபட்ச நிறுவன எண்ணிக்கை உயர்வு இது. சதவீத அடிப்படையிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே வேகமான வளர்ச்சி. இதற்கு முன் 2021ல் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய தொழில் நடவடிக்கைகள் மீண்டபோது, 11.70 சதவீத வளர்ச்சி பதிவாகியிருந்தது.

நிறுவனங்களின் வளர்ச்சி பாரம்பரிய தொழில் மையங்களை கடந்து, புதிய மாநிலங்களி லும் வேக மாக அதிகரித்து வருகிறது.

மஹாராஷ்டிரா, டில்லி போன்ற நகரங்கள் மட்டுமின்றி, பீஹார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொழில் வளர்ச்சி விரிவடைந்து வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 16 சதவீதம் உயர்ந்து 77,658 ஆகியுள்ளது. பீஹாரில் 18 சதவீதம் உயர்ந்து 49,500 ஆக உள்ளது. உ.பி.,யில் 18 சதவீதம் உயர்ந்து, 2026 ஜூனில் 1.87 லட்சமாக உள்ளது.

இவ்வாறு தரவுகள் தெரிவிக்கின்றன.

உட்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் வசதி விரிவாக்கம், ஒழுங்குமுறை நடைமுறைகளில் தளர்வு போன்றவை, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன.

Source link