எரிபொருள் தேவை 3% குறைந்தது எல்பிஜி பயன்பாடு 17% சரிவு

புதுடில்லி: இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் பயன்பாடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 2.80 சதவீதம் குறைந்து, 1.86 கோடி டன்னாக இருந்தது.

பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்த போதிலும், எல்.பி.ஜி., எனும் சமையல் எரிவாயு மற்றும் நாப்தா விற்பனை அளவு சரிந்ததே ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் தரவுகளின்படி, பெட்ரோல் விற்பனை 8.20 சதவீதம் அதிகரித்து, 38.40 லட்சம் டன்னாகவும், டீசல் பயன் பாடு 6.80 சதவீதம் உயர்ந்து, 70.20 லட்சம் டன்னாகவும் இருந்தது.

அதேநேரத்தில், சமையல் எரிவாயு – எல்.பி.ஜி., விற்பனை 17.20 சதவீதம் குறைந்து 23.50 லட்சம் டன் ஆனது. சாலை போடுவதற்கான தார் விற்பனை 19.80 சதவீதம் அதிகரித்தது.

எரிபொருள் பயன்பாடு எரிபொருள் பயன்பாடு சதவீதம் பெட்ரோல் 38.4 லட்சம் டன் +8.2% டீசல் 70.2 லட்சம் டன் +6.8% எல்.பி.ஜி., 23.5 லட்சம் டன் -17.2% நாப்தா 8.30 லட்சம் டன் -22.3% வாகன என்ஜின் ஆயில் +19.8% ஒட்டுமொத்த வளர்ச்சி சரிவு -2.8%

Source link