நீங்களுமா..? போலி லேபிள் ஒட்டி காலாவதியான பொருட்கள் விற்பனை: அமேசான், இன்ஸ்டா கிடங்குகளுக்கு சீல்!

ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆன பொருட்களில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

அதில், அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அடங்கிய விவரங்கள் ஏதும் இல்லாத ரூ.56 லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, தேவனஹள்ளியில் உள்ள ‘அமேசான் BLR6’ என்ற சேமிப்பு மையத்தில் KSFDA அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு தவறான அல்லது போதுமான விவரங்கள் இல்லாத லேபிள் தொடர்பான விதிகளை பின்பற்றாத ரூ.14 லட்சம் மதிப்பு உணவுப்பொருட்களும், ரூ.10 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருட்களும், ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவை உரிய லைசென்ஸ் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மடிவாலாவில் உள்ள ‘அமேசான் BLR7’ மையத்தில், ரூ.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தவறான லேபிள் கொண்ட உணவுப் பொருட்களும், ரூ.13 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப்பொருட்களும், லைசென்ஸ் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்த ரூ.1.57 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Source link