இடைத்தேர்தலை அறிவித்த உடனேயே முதல் கட்சியாக , அதிமுக வேட்பாளர் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், விருப்ப மனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுகவே உற்சாகமாக தேர்தலில் களமிறங்கும் போது , எதிர்கட்சியான திமுக இதுவரை இடைத்தேர்தல் குறித்து எந்த ஒரு கருத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை. இடைத்தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போட்டியிட வைத்து , அவரை மீண்டும் சட்டமன்றம் அனுப்ப வேண்டும் என்று திமுக கடுமையான முனைப்பில் இருந்தது. ஆனால், தற்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் களமிறங்க தவெகவும், அதிமுக முடிவு செய்து தீவிரமாக களத்தில் இறங்க உள்ள நிலையில் திமுக மௌனம் காத்து வருகிறது. இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறது. வழக்கமாக எதிர்கட்சியாக இருக்கும் போது தேர்தலை புறக்கணிப்பது திமுகவின் வாடிக்கை என்றாலும் , ஒரு சில முறை போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. அதே நேரம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
