Chennai News Live updates: பனையூர் அலுவலகத்தில் கூட்டணி கட்சியினருடன் விஜய் இன்று ஆலோசனை

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப்.8) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி (CNG) ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே நீடிக்கிறது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனையாகி வருகின்றன. அதேபோல், வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தும் சி.என்.ஜி எரிபொருளின் விலையிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிலோகிராம் சி.என்.ஜி வாயு ரூ.97.00 என்ற நிலையான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தாராபுரத்தில் அ.தி.மு.க சார்பில் வென்ற சத்யபாமா எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் தொகுதி காலியானது. அங்கு 16-ம்தேதி வரை வேட்புமனு பெறப்படுகிறது. ஆர்.டி.ஓ பெலிக்ஸ்ராஜா தலைமையில் விரிவான ஏற்பாடுகளும், சிசிடிவி கண்காணிப்பும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன; ஆவணமின்றி ரூ.50,000 மேல் பணம் கொண்டு செல்வதை தடுக்க 9 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் தலைமையில் த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அப்துல் ரசாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • Sep 09, 2026 07:36 IST

    கூட்டணி கட்சியினருடன் விஜய் இன்று ஆலோசனை

    சென்னை பனையூர் த.வெ.க அலுவலகத்தில் கூட்டணி கட்சியினருடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கூட்டணிக்கு பெயர் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link