விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதனைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பரணி பாணியை பின்பற்றிய போட்டியாளர்; பிக்பாஸ் வீட்டு சுவர் ஏறி குதித்த அன்சார்: வீடியோ வைரல்
ஆரவ், ரித்விகா, முகன் ராவ், ஆரி அர்ஜுன், ராஜு ஜெயமோகன், முஹம்மது அசிம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன், திவ்யா கணேஷ் ஆகியோர் இதுவரை நடைபெற்று உள்ள சீசன்களில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த 10-வது சீசனில் இதுவரைக்கும் நடக்காத பல அதிரடியான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அது போக வீட்டிற்குள் 19 போட்டியாளர்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சீசனில் ‘மகாநதி’ சீரியலில் நடித்த லட்சுமி பிரியா, நடிகை ஷாதிகா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், சீரியல் நடிகை முத்தழகி, நடிகை தன்யா, ஒப்பனை கலைஞர் அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
#Day3#Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10#Ottikichi#VijaySethupathi#CarniVizha#BiggBossSeason10Tamil#BiggBoss10#BiggBossSeason10#BiggBossTamilBB10#VijayTV#VijayTelevisionpic.twitter.com/OJEiAqlCKX
— Vijay Television (@vijaytelevision) September 9, 2026
எப்பவும் போல பிக்பாஸ் வீடு சண்டையும் வாக்குவாதமுமாக தான் செல்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், “கிச்சன் ஏரியாவில் இருக்கும் முனியம்மாவிடம் தயவு செய்து இதைவிட முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது அதை பாருங்கள் என்று பிளாக் பாண்டி ஆவேசத்துடன் கூறுகிறார். இதையடுத்து, சாந்தினி மற்றும் சிலர் முனியம்மாவிடம் பேசுகிறார்கள்.
அப்போது சாந்தினி நீங்க சொல்றது எதையும் கேட்பதில்லை என்று கூறுகிறார். அதற்கு முனியம்மா என்னை கேட்க உங்களுக்கு தகுதியே இல்லை என்றதும் கடுப்பான சாந்தினி எனக்கு தகுதி இருக்கா? இல்லையானு நீங்க முடிவு பண்ணக் கூடாது என்றதும் முனியம்மா வீட்டு பதவிக்கு நீங்க சுத்தமாக லாயிக்கு இல்ல” என்கிறார் இதனுடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
